இயந்திரத்தில் மின் கசிந்து பெண் தொழிலாளி பலி: உறவினர்கள் முற்றுகை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இயந்திரத்தில் மின் கசிந்து பெண் தொழிலாளி பலி: உறவினர்கள் முற்றுகை

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்: தலைவாசல் அருகே, மின்சாரம் தாக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழந்தார். தலைவாசல், நாவக்குறிச்சி அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பாலு, 50. இவர் மனைவி சின்னப்பொன்ணு, 48. பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா, 40, பட்டுத்துறை கிராமத்திலுள்ள பி.ஜி., சூப்பர் மார்க்கெட்டிற்கு அருகில், மூன்றடுக்கு மாடி வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டிற்கு இரவு நேர காவலாளியாக பாலுவும், கட்டட தொழிலாளியாக சின்னப்பொன்ணுவும் வேலை செய்து வந்தனர். நேற்று காலை, 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கெங்கவல்லியை சேர்ந்த பெண் தொழிலாளி, மின் மோட்டார் பொருத்தப்பட்ட மணல் சலிக்கும் இயந்திரத்தில், மணலை சலித்து கொண்டிருந்தார். அப்போது, மின் கசிவு ஏற்பட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சின்னப்பொன்ணு மணலை சலித்த போது, அவரையும் மின்சாரம் தாக்கியது. அதில் சுருண்டு விழுந்ததில், மின் ஒயர் அவரது கழுத்தை சுற்றியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தலைவாசல் வி.ஏ.ஓ., ஞானவேல் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திரண்ட சின்னப்பொன்ணு உறவினர்கள், உடலை எடுத்து செல்ல விடாமல் போலீசாரை முற்றுகையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய பின், உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X