சிறுமி கொலை வழக்கு: கைதானவர் கோர்ட்டில் ஆஜர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமி கொலை வழக்கு: கைதானவர் கோர்ட்டில் ஆஜர்

Added : நவ 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ஆத்தூர் அருகில், சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட தினேஷ்குமாரை நேற்று, போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். ஆத்தூர், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த, 14வயது சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்த தினேஷ்குமார் என்பவரை, ஆத்தூர் போலீசார் கைது செய்தனர். இவர் மீது, போக்சோ சட்டம் மற்றும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என, பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன. இந்நிலையில், நேற்று உதவி கமிஷனர் தினகரன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சிறையிலிருந்த தினேஷ்குமார், சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மீண்டும் வழக்கை, 22க்கு, நீதிபதி விஜயகுமாரி ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X