பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்| Dinamalar

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும்

Added : நவ 09, 2018 | கருத்துகள் (117)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Telangana assembly election, Bharatiya Janata, Bhagyanagar, Hyderabad, பா.ஜ., ஐதராபாத், தெலுங்கானா, பாக்யநகர், ராஜா சிங் எம்எல்ஏ , தெலுங்கானா சட்டசபை தேர்தல், தெலுங்கானா தேர்தல், முகலாயர்கள் , நிஜாம்கள் ,பாரதிய ஜனதா, 
BJP, Telangana,  Raja Singh MLA, Telangana election, Mughals, Nizams,

ஐதராபாத் : தெலுங்கானாவில் அதிகப்படியான இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். மாநிலத்தின் வளர்ச்சி தான் எங்களின் முதல் நோக்கம். அடுத்தபடியாக ஐதராபாத் பெயர் பாக்யநகர் என மாற்றப்படும் என பா.ஜ., எம்எல்ஏ ராஜா சிங் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் டிசம்பர் 7 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பா.ஜ., எம்எல்ஏ.,வான ராஜா சிங் கூறுகையில், 1590 ல் அலி குதுப் ஷா பாக்யநகர் என்ற பெயரை ஐதராபாத் என மாற்றினார். பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் மீண்டும் பாக்யநகர் என பெயர் மாற்றப்படும். இதே போன்று செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும்.
முகலாயர்கள் மற்றும் நிஜாம்கள் காலத்தில் மாற்றப்பட்ட பெயர்களும் தெலுங்கானாவிற்காகவும், நாட்டிற்காகவும் போராடியர்களின் பெயர்களாக மாற்றப்படும் என்றார். முன்னதாக குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், ஆமதாபாத் நகரம் கர்னாவதி என மாற்றப்படும் எனவும், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பைசாபாத் நகரம் அயோத்யா என பெயர் மாற்றப்படும் எனவும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajit Kumar - Chennai,இந்தியா
12-நவ-201816:51:32 IST Report Abuse
Ajit Kumar பேரை மாற்றுவதால் என்ன லாபம், முதலில் வேலை வாய்ப்பு அதிக படுத்துங்கள், வறுமையை வொளியுங்கள், தேவை இல்லாததை செய்வதால் மக்களுக்கு என்ன லாபம்
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
10-நவ-201810:37:02 IST Report Abuse
Muthukrishnan,Ram செய்தால் நல்லது செய்வார்களா?
Rate this:
Share this comment
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
11-நவ-201809:05:25 IST Report Abuse
Sitaramen Varadarajanநிச்சயம் நல்லது நடக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
10-நவ-201808:28:00 IST Report Abuse
Anandan ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லைனு தெரிந்ததால்தான் இப்படி ஒரு வாக்குறுதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X