ஆர்பிஐ.,யின் பணத்தை அரசு கேட்கவில்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆர்பிஐ.,யின் பணத்தை அரசு கேட்கவில்லை

Added : நவ 09, 2018 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆர்பிஐ, மத்திய அரசு, நிதி பற்றாக்குறை, மத்திய அரசு

புதுடில்லி : மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள பணத்தை ஒப்படைக்கும் படி மத்திய அரசு கேட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுநாஷ் சந்திர கார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மீடியாக்களில் பல தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அரசின் நடப்பாண்டு கணக்கு மொத்தமாக வரையறுக்கப்பட்டது. மற்றவர்கள் கூறுவது போல் ஆர்பிஐ.,யிடம் உள்ள ரூ.3.6 அல்லது 1 லட்சம் கோடியை அரசிடம் அளிக்கும்படி எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. அதற்கு மாற்றாக ஆர்பிஐ.,யின் பொருளாதார கட்டமைப்பை ஒருங்கிணைக்க வேண்டும் என்று மட்டுமே அரசுடன் ஆலோசிக்கப்பட்டது.

2013-14 ம் நிதியாண்டில் அரசின் நிதி பற்றாக்குறை 5.1 சதவீதமாக இருந்தது. 2014-15 ம் ஆண்டு முதல் அரசு இதனை வெற்றிகரமாக குறைக்க துவங்கியது. 2018-19 ம் நிதியாண்டு முடிவில் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
09-நவ-201822:20:26 IST Report Abuse
adalarasan பொய் களை பரப்பி, எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஊழல்வாதிகள், ஆட்சியை பிடித்து, கிடிக்கிப்பிடியில் இருந்து தப்பிக்க வழி வகுக்கப்பார்கிறார்கள்?இது, எவ்வளவு தூரம், எவ்வளவு,நாட்கள், வழிமுரையில் சாதியம் ?மக்கள் சிந்திக்கவேண்டும்? இவர்களுக்கு என்று ஒரு கொள்கையில்லாமல், சும்மா, மோடி வொழிக, என்று மட்டும், கூறி, ஆட்சியை பிடிப்பவர்களை நம்பினால், மக்கள் தான், பிறகு, துக்கப்படவேண்டியிருக்கும் ?இவர்கள், ஆட்சியில்,2014varai செய்த, குலுறுபாடுகள், ஊழல்களை சரி செய்து குற்றவாளிகளை, [லல்லுஜிபோல்]உள்ளே போட இந்த அரசுக்கு இன்னும் 5ஆண்டுகள் தேவைப்படும்?நாடு சீராகி, உலகளவில், வலுவான நாடாக திகழும்
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
09-நவ-201821:39:24 IST Report Abuse
Mannai Radha Krishnan இவர்கள் எழுதுவதை பார்த்தால் ரிசர்வ் பாங்கில் உள்ள உபரி பணத்தை மோடி தன்னிடம் தருமாறு பொறுள் படும் படி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. அதை இங்கு ப்ரசுரத்திதே தவறு.
Rate this:
Share this comment
Cancel
09-நவ-201820:23:42 IST Report Abuse
ஆப்பு இவிங்க என்னதான் இவிங்களோட நியாயத்த சொன்னலும், ரிசர்வ் வங்கி மறுப்பதேன்? உலக அளவில் ரிசர்வ் வங்கிகளின் பாதுகாப்பு அதாவது ரிசர்வ் தொகை 15% வரை இருக்கும் போது, பாரத ரிசர்வ் வங்கி அதை 27% ஆக வைத்துக் கொண்டுள்ளதை காரணம் காட்டி உபரி பணத்தை இதர வங்கிகளுக்கு அளிக்கும் படி. வற்புறுத்துகிறார்கள். இதற்கு உர்ஜித் மறுப்பதேன்? வரும் நவம்பர் 19ந்தேதி நடைபெற இருக்கும் கூட்டத்தில் உர்ஜித் படேல் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X