'தேர்வில் ஜெயிப்பது உறுதி: உதித்தது புதிய நம்பிக்கை' திருத்தணியில், 'தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தேர்வில் ஜெயிப்பது உறுதி: உதித்தது புதிய நம்பிக்கை' திருத்தணியில், 'தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'தேர்வில் ஜெயிப்பது உறுதி: உதித்தது புதிய நம்பிக்கை'  திருத்தணியில், 'தினமலர் - ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி

திருத்தணி: 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி, 13ம் ஆண்டாக திருத்தணி யில், நேற்று நடந்தது. இதில், திரளான மாணவ -- மாணவியர் பங்கேற்று, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன், ஜெயித்துக் காட்டுவோம் என, நம்பிக்கை தெரிவித்தனர்.பொதுத்தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ -- மாணவியர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'பட்டம்' மாணவர் பதிப்பு சார்பில், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 13ம் ஆண்டாக, நேற்று, ஜி.ஆர்.டி. இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரியில், இந்நிகழ்ச்சி நடந்தது.பேருந்து வசதிஇதில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கே.ஜி.கண்டிகை, திருவாலங்காடு என, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான மாணவ -- மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.கல்லுாரி நிர்வாகம் சார்பில், திருத்தணியில் இருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு, மாணவ - மாணவியர் அழைத்து வரப்பட்டனர். மேலும், பல மாணவர்கள் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன்கள் மூலம் ஆர்வமுடன் வந்தனர்.காலை, 8:30 மணிக்கு, 10ம் வகுப்பு மாணவ -- மாணவியருக்கான நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மாதிரி வினா --- விடை அடங்கிய புத்தகம், இலவசமாக வழங்கப்பட்டது. அகண்ட காணொலி திரை மூலம் ஆசிரியர்கள் வழங்கிய பாட குறிப்புகளை மாணவர்கள் ஆர்வமுடன் குறிப்பெடுத்தனர்.மதியம், 1:00 மணிக்கு, பிளஸ் 2 மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது; பாடங்களை எவ்வாறு படிப்பது; அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம், நிச்சயம் அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் ஜெயித்துக் காட்டுவோம் என, நம்பிக்கை தெரிவித்தனர்.'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, திருத்தணி, ஜி.ஆர்.டி., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.வழிகாட்டிய ஆசிரியர்கள்பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, சென்னை, மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தமிழ் ஆசிரியர், என்.தாயுமானவன்; சென்னை, திருவல்லிக்கேணி, ஹிந்து மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் மற்றும் அறிவியல் ஆசிரியர் பி.ஆனந்தன் அறிவுரை வழங்கினார். சென்னை, வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியர் மற்றும் கணித ஆசிரியர் பி.சுரேஷ்; சென்னை மேல்நிலைப் பள்ளி, ஷெனாய் நகர், சமூக அறிவியல் ஆசிரியர், வெ.யுவராஜ்.பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, சென்னை, திருவல்லிக்கேணி, ஹிந்து மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியர், வி.சி.கோபி ஆனந்தன்; சென்னை, முகப்பேர் கிழக்கு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வேதியியல் ஆசிரியர், ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் வழங்குவது குறித்து விளக்கினர். சென்னை, வண்ணாரப்பேட்டை, பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி கணிதம் ஆசிரியர், டி.ராஜ்; சென்னை, புரசைவாக்கம், சர்.எம்.சி.டி.எம்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விலங்கியல் ஆசிரியர், ஆர்.சவுந்தரபாண்டியன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். சென்னை, ஏ.பி.பரேக் குஜராத்தி வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி பொருளியல் மற்றும் கணக்கு பதிவியல் ஆசிரியர், ஏ.பி.பழனி; குரோம்பேட்டை, அரசு மேல்நிலைப் பள்ளி, வணிகவியல் ஆசிரியர் பி.முருகன் ஆகியோர் மதிப்பெண் பெறுவது குறித்து எடுத்துக் கூறினர்.சென்னை, வில்லிவாக்கம், பத்ம சாரங்கபாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கணினி அறிவியல் ஆசிரியர் ஆர். வசந்தகுமார் ஆகியோர், தேர்வு குறித்து ஆலோசனை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X