மெட்ரோ ரயில் நிலையங்களில் கார், ஆட்டோ கட்டணம் குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயில் நிலையங்களில் கார், ஆட்டோ கட்டணம் குறைப்பு

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில், 'கால் டாக்சி' மற்றும் ஆட்டோக்களுக்கான கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையிலிருந்து சென்ட்ரலுக்கும், விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை - டி.எம்.எஸ்., வரையும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில்களில் பயணியர் வருகையை அதிகரிக்க, மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன்படி, தேனாம்பேட்டை - டி.எம்.எஸ்., அண்ணா நகர் கிழக்கு, கோயம்பேடு, ஆலந்துார், வடபழனி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில், 'ஷேர் டாக்சி' வசதி செய்யப்பட்டு உள்ளது.கிண்டி, திருமங்கலம், ஆலந்துார், சின்னமலை, ஈக்காடுதாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை, அசோக்நகர், போன்ற ரயில் நிலையங்களில், ஷேர் ஆட்டோ வசதி செய்யப்பட்டு உள்ளது.ஷேர் டாக்சியில், 3 கி.மீ., பயணம் செய்ய, 15 ரூபாயும், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்ய, 10 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.தற்போது, பயணியர் வசதிக்காக, ஷேர் ஆட்டோவில், 3 கி.மீ., பயணம் செய்ய, 5 ரூபாய், ஷேர் டாக்சிக்கு, 10 ரூபாய் என, மேலும் கட்டண குறைப்பு செய்யப்பட்டு உள்ளது.இந்த கட்டண குறைப்பு, 12ம் தேதியிலிருந்து, 2019 ஜன., 31ம் தேதி வரை அமலில் இருக்கும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X