நந்தம்பாக்கத்தில் சில்மிஷம் ராணுவ வீரருக்கு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நந்தம்பாக்கத்தில் சில்மிஷம் ராணுவ வீரருக்கு சிறை

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆலந்துார்: நந்தம்பாக்கம், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பயிற்சி பெண் அதிகாரியிடம், சில்மிஷம் செய்த ராணுவ வீரருக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நந்தம்பாக்கம், டிபென்ஸ் காலனியில், ராணுவ மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு, 2015 ஏப்., 13ல், பிசியோதெரபி சிகிச்சைக்காக, ராணுவத்தில் பயிற்சி பெற்ற பெண் அதிகாரி ஒருவர் சென்றுள்ளார்.அப்போது, பிசியோதெரபி பிரிவில் உதவியாளராக பணியாற்றிய, திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 35 என்பவன், பெண் அதிகாரியிடம் சில்மிஷம் செய்துள்ளான்.இது தொடர்பான வழக்கை, சென்னை ராணுவ நீதிமன்றம் விசாரித்து, பிரகாஷுக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ராணுவத்தில் இருந்து பணி நீக்கம் செய்யவும், கடந்த ஜூனில் உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை ஏற்று அமல்படுத்த, தென் மண்டல ராணுவ கமாண்டர் உத்தரவிட்டார்.இதையடுத்து, ராணுவ மருத்துவமனை முதன்மை பதிவாளர், கர்னல் ஜேக்கப், பிரகாஷை ராணுவத்தில் இருந்து நீக்கம் செய்தார்.அவனுக்கு, இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை நிறைவேற்ற, நந்தம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.நந்தம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சிவகுமாரிடம், பிரகாஷை நேற்று ஒப்படைத்தனர். இதையடுத்து, பிரகாஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X