ரயில் நிலையத்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி: திருத்தணி ரயில் நிலைய முதல் பிளாட்பாரத்தில், 100 ஆண்டுகளான வேப்ப மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணியர் தப்பினர்.திருத்தணி ரயில் நிலையத்தில், மூன்று நடைமேடைகள் உள்ளன. முதல் நடைமேடையில், பயணியர் ஏறும் மேம்பாலம் அருகே, 100 ஆண்டுகளான வேப்ப மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு, வேப்ப மரம் திடீரென வேருடன் நடைமேடையின் குறுக்கே சாய்ந்தது.இதனால், ரேணிகுண்டா - திருப்பதி செல்லும் ரயில் தண்டவாளத்தில் மரக்கிளைகள் விழுந்தன. மேலும், வேப்ப மரம் விழுந்த நேரத்தில், அங்கு பயணியர் யாரும் இல்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பயணியர் சிறுகாயமின்றி தப்பினர்.இந்த மரம் விழுந்ததால், ஒரு குடிநீர் குழாய், இரண்டு இருக்கைகள் சேதம் அடைந்தன.இதையடுத்து, ரயில்வே ஊழியர்கள், விழுந்த மரம் முழுவதையும்,நடைமேடையில் இருந்தும், ரயில் தண்டவாளத்தில் இருந்தும் அகற்றினர். மேலும், ரயில் போக்கு வரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X