வாலிபர் கொலை மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை மூவர் கைது

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆர்.கே.பேட்டை: கொலை செய்யப்பட்ட வாலிபரின் சடலம், நேற்று, ஆந்திர மாநிலம், நகரி அருகே தோண்டி எடுக்கப்பட்டது. இது தொடர்பாக, மூன்று பேரை கைது செய்த போலீசார், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, ராமபத்ர கண்டிகையைச் சேர்ந்தவர் ராமன் மகன் கருணாமூர்த்தி, 28. இவர், 3ம் தேதி முதல் காணவில்லை. இவர், வெள்ளாத்துாரைச் சேர்ந்த அரிபாபு, 35, என்பவருக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பணம் கடனாக கொடுத்திருந்ததாகவும், அதை திரும்ப கேட்டபோது, நேரில் வந்து பெற்று கொள்ளும்படி, அழைத்தாக கூறப்படுகிறது.அதன்பேரில், வீட்டை விட்டு வெளியில் சென்ற கருணாமூர்த்தியை, அரிபாபு மற்றும் அவரது நண்பர்களான, தங்கராஜ், சிரஞ்சீவி, வெங்கடேசன் ஆகியோர், திருத்தணி அடுத்த சிறுகுமியில், ஒரு தோட்டத்தில் வைத்து, கொலை செய்துள்ளனர்.பின், கருணாமூர்த்தியின் உடலை, ஆந்திர மாநிலம், நகரி அடுத்த, கே.வி.புரம் பகுதியில் புதைத்ததாக தெரிய வந்துள்ளது.இந்த தகவலின் பேரில், நேற்று, ஆர்.கே.பேட்டை போலீசார், தங்கராஜ், சிரஞ்சீவி, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.நேற்று, கே.வி.புரம் சென்ற, ஆர்.கே.பேட்டை போலீசார், சடலத்தை தோண்டி எடுத்து கருணாமூர்த்தியின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.தங்கராஜ், சிரஞ்சீவி, வெங்கடேசன் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அரிபாபு உட்பட மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X