தேசிய சட்ட சேவைகள் தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய சட்ட சேவைகள் தின விழா

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தேசிய சட்ட சேவைகள் தின விழா, நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய சட்ட சேவைகள் தின விழா, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தலீலா தலைமையில், நேற்று முன் தினம், நடைபெற்றது.மக்கள் நீதிமன்ற தலைவர் ராஜா, தலைமை குற்ற வியல் நீதிமன்ற நீதிபதி கீதாராணி, மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், செயலர் கிரி மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில், முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தலீலா பேசியதாவது:தேசிய சட்டப் பணிகள் மூலம், பண வசதி இல்லை என்ற காரணத்திற்காக, ஓர் ஏழைக்கு, சட்டப் பலன்கள் கிடைக்காமல் இருக்கக் கூடாது என்பதற்காக, தொடங்கப்பட்டது, சட்டப் பணிகள் ஆணைக்குழு. இந்த ஆணைக்குழு மூலம் நடத்தப்படும், மக்கள் நீதிமன்றம் மூலம், பல்லாயிரக்கணக்கான, மக்கள் பயன் பெறுகின்றனர்.அந்த வகையில், சட்டப் பணிகள் மட்டும் இல்லாது, வேறு சட்டம் சாரா பணிகளிலும், இந்த ஆணைக்குழு சேவை புரிந்து வருகிறது. பொதுமக்கள் இந்த ஆணைக்குழுவின் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.அதன்பின், மக்கள் நீதிமன்றம் குறித்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X