சீட்டு பிடித்தவர் தலைமறைவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சீட்டு பிடித்தவர் தலைமறைவு

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்: தீபாவளி பண்டு சீட்டு பிடித்து, பணத்தை ஏமாற்றி சென்ற தம்பதியினர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று புகார் அளித்தனர்.செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன், அவர் மனைவி சத்யா, இருவரும், கிராமப் பகுதிகளில், இரு ஆண்டுகளாக தீபாவளி பண்டு பிடித்து மளிகை பொருட்கள் மற்றும் தங்கம் வழங்கி வந்தனர்.இதில், சிலர் சீட்டு பிடித்து கொடுத்தால், அவர்களுக்கு கமிஷன் கொடுத்துள்ளனர். அதை நம்பி சிலர், பணம் வசூல் செய்து அவர்களிடம் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு, தீபாவளிக்கு முன், வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் கிடைக்காததால், சிலர் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.வீட்டில் யாரும் இல்லை, 1,000 பேரிடம், 65 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் சிலர், காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், சீட்டு நடத்தி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, நேற்று, புகார் மனு அளித்தனர்.இது குறித்து, பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் தேசிகன் கூறியதாவது:பணம் வசூல் பிடித்து கொடுத்தவர்கள்தான் புகார் அளித்தனர். பணம் கொடுத்த பொது மக்களிடம் விசாரணை செய்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X