'தினமலர்' நாளிதழ் நடத்திய வினாடி - வினா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' நாளிதழ் நடத்திய வினாடி - வினா

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
'தினமலர்' நாளிதழ் நடத்திய வினாடி - வினா

அம்பத்தூர்: தினமலர்' நாளிதழ் நடத்திய வினாடி - வினா நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவியர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.சென்னை அம்பத்தூர் அடுத்த புதூர், சேதுபாஸ்கரா மேல்நிலைப்பள்ளியில், நேற்று, தினமலர் நாளிதழும், 'பர்ஸ்ட் பெஞ்ச், கோ 4 குரு' ஆகியவை இணைந்து, வினாடி-வினா விருது 2018-19' என்ற தலைப்பில் போட்டி நடத்தின.பள்ளி முதல்வர் செல்வகுமார் தலைமையில் நடந்த போட்டியில், காஞ்சி, கரந்தை, வெட்சி, வஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை என்ற குறத்தினை பூக்கள் பெயரில், 8 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.அதில், கரந்தை அணியின் பிளஸ், 1 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் எஸ்.சிரஞ்சீவி, எஸ். அனீஷ் பிரசாத், முதலிடத்தையும், வெட்சி அணியின் பிளஸ், 1 மாணவர்கள் எஸ். சினேகன், எஸ்.விக்னேஷ் பாபு, இரண்டாமிடத்தையும், வஞ்சி அணியின், பிளஸ், 2. மற்றும் 9ம் வகுப்பு மாணவிகள் ஜெ.கீ்ர்த்தனா, என். ராகவி ஆகியோர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.அவர்களுக்கு, கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, பள்ளி முதல்வர் செல்வகுமார் வழங்கினார்.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், 100 அரசு மற்றும் பள்ளிகளை தேர்வு செய்து, அங்குள்ள மாணவர்களின் திறன் வளர்க்கும், கல்வி, அறிவியல் தொடர்பான பொது அறிவு வினாடி-வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.அடுத்தாண்டு ஜனவரியில், அவர்களுக்கான இறுதிப்போட்டி நடக்கும். அதில் முதலிடம் பிடிக்கும் இருவர், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிப்பவர்களுக்கு முறையே, 1 லட்சம் மற்றும் 50,000 ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X