'மாணவர் - ஆசிரியர் இடையே நல்லுறவு அவசியம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவர் - ஆசிரியர் இடையே நல்லுறவு அவசியம்'

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'மாணவர் - ஆசிரியர் இடையே நல்லுறவு அவசியம்'

சென்னை: ''மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே, நல்லுறவு மிகவும் அவசியம்,'' என, கல்வி சார்ந்த நுால் வெளியீட்டு விழாவில், இந்திய மான்டிசொரி மைய இயக்குனர், உமாசங்கர் பேசினார்.மாணவர்கள், ஆசிரியர்கள் உறவு; மாணவர்கள் உளவியல் மற்றும் எளிமையாக கற்பித்தல் முறை ஆகியவை குறித்த, 'டீச்சிங் டேல்ஸ்; லேர்னிங் ட்ரைல்ஸ்' என்ற நுால் வெளியீட்டு விழா, சென்னை, ஆர்.ஏ.புரத்தில் நேற்று நடந்தது.கல்வியாளர்கள், நீரஜா ராகவன், வினிதா சூட், கமலா அணில்குமார் ஆகியோர் இணைந்து, இந்நுாலை தொகுத்து வெளியிட்டுள்ளனர்.அடையாறு, 'டெம்பிள்ட்ரீ' பள்ளி நிர்வாகம்,நுால் வெளியீட்டு விழாவை, முன்னின்று நடத்தியது. கல்வி ஆலோசகர் பல்லவி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.இந்திய மான்டிசொரி சரி பயிற்சி மைய இயக்குனர், உமாசங்கர், நுாலை வெளியிட்டு பேசியதாவது:மாணவர்கள், உளவியலை எளிதில் அறிந்து கொள்வது தான், ஒரு ஆசிரியரின் முதல் வேலை. அதற்கு ஏற்ப, பாடத்தை அவர்களிடம் புரிய வைக்க வேண்டும். அதோடு, கற்றல் ஆற்றலை அறிதல், தனித்திறமைகளை கண்டறிதல், அதை ஊக்கப்படுத்துதல், தேவையான உதவிகளை செய்தல் போன்ற கடமைகளும், ஆசிரியர்களுக்கு உள்ளது.பெற்றோர், தன் குழந்தை எப்படி இருக்க வேண்டும் என, கற்றுக் கொடுப்பதற்கு முன், வாழ்ந்து காட்டி, சூழலை புரிய வைப்பது மிகவும் முக்கியம்.மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே நல்லுறவு மிகவும் அவசியம். அப்போது தான், பாடம் மட்டுமின்றி, மாணவர்களை பாதிக்கும் தனிப்பட்ட பிரச்னைகளையும், ஆசிரியர்களிடம் பகிர்ந்து, நல்ல விதமான தீர்வு காண முடியும்.அதேபோல், மாணவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ள, பெற்றோர், ஆசிரியர்கள் நல்லுறவும் முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.'ட்ரீ' அமைப்பின் கல்வி இயக்குனர், மாயா தியாகராஜன் பேசியதாவது:மாணவர்களிடம், ஆசிரியர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை, துல்லியமாக இந்நுால் விளக்குகிறது.மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை அகற்றினால், மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவர். கதைகள், உரையாடல் மூலம், மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.ஆசிரியர்களை வெறுக்கும் மனநிலையை மாற்ற வேண்டும். தேர்வு முறையிலும், மாற்றம் தேவைப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.'டெம்பிள் ட்ரீ' பள்ளி இயக்குனர், நந்தினி பழனியப்பன் பேசியதாவது:மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இடையே, உரையாடல் சார்ந்த இடைவெளி அதிகம் உள்ளது. இவர்கள், கூட்டாக சேர்ந்தால் தான், நல்ல கல்வியை கொடுக்க முடியும்.இதற்கான, கலந்துரையாடல் கூட்டம், மாதம் தோறும், 'டெம்பிள் ட்ரீ' சார்பில் நடத்த உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள், 98416 42502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.நுால் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. நுால் தொகுப்பாளர்கள், நுால் தயாரிப்பு குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.தொடர்ந்து, பார்வையாளர்கள் மத்தியில், கலந்துரையாடல் நடத்தப்பட்டன. நுால் குறித்த கேள்விகளுக்கு, தொகுப்பாளர்கள் பதில் கூறினர்.விழாவில், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X