சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்பு' Dinamalar
பதிவு செய்த நாள் :
'சபரிமலை அய்யப்பன் கோவிலில் தேசவிரோதிகள் ஊடுருவ வாய்ப்பு'

சபரிமலை: சபரிமலையில் தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி, தேசவிரோத சக்திகள் ஊடுருவி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், இரண்டாவது முறையாக கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சபரிமலை, அய்யப்பன், கோவில், தேசவிரோதிகள்



சித்திரை ஆட்டத்திருநாள் மற்றும் ஐப்பசி மாத பூஜையின் போது, சபரிமலையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில், சபரிமலை சிறப்பு ஆணையர் மாவட்ட நீதிபதி மனோஜ், நேற்று அறிக்கை தாக்கல்செய்துள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது:

சபரிமலையில் தற்போதுள்ள சூழ்நிலை மோசமாகவும், அபாயகரமாகவும் உள்ளது. சித்திரை ஆட்டதிருநாள் பூஜைக்கு வந்த பெண்களை தடுத்தது தவறு. 18-ம் படியில் ஏறியதில் ஆசார மீறல் நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை வருவர். தற்போதைய நிலை தொடர்ந்தால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம். நம்பிக்கை மற்றும் ஆசாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும் இந்த

Advertisement

போராட்டத்தை பயன்படுத்தி தேச விரோத சக்திகள், ஊடுருவி அவர்கள் லட்சியங்களை நிறைவேற்ற முயற்சி செய்யக்கூடும். அரசியல் கட்சிகள் போராட்டங்களில் கட்டுப்பாடு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். ஐப்பசி மாத பூஜைக்கு பின்னரும், இது போல், ஒரு அறிக்கையை அவர் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-நவ-201817:47:06 IST Report Abuse

நக்கல் கம்ம்யூனிஸ்டுகள் ஊடுருவ வாய்ப்பு என்று நேராகவே போட்டிருக்கலாம்..

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
11-நவ-201816:00:53 IST Report Abuse

தமிழ் மைந்தன் அவரு கம்யூனிஸ்ட் என்ற வார்த்தைக்கு பதிலாக தேச விரோத என்ற வார்த்தையை பயன்படுத்தி விட்டார்............சிறிய தவறு........தமிழகமாக இருந்தால் திமுக என எழுதியிருப்பார்....

Rate this:
சிற்பி - Ahmadabad,இந்தியா
11-நவ-201812:54:06 IST Report Abuse

சிற்பி நீதி மன்றம் மனம் போன போக்கில் தீர்ப்புகள் வழக்கினால் இப்படித்தான் நாடு கெடும். தாந்திரீக முறைப்படி நடக்கும் கோவில்களில் உள்ள வழக்கங்களை நீங்கள் மாற்ற இயலாது என்பது தான் சட்டம். ஆனால் இதை பாதுகாக்க வேண்டும் தேவஸ்வம் போர்டு கம்யுனிஸ்ட் வசம். இந்து மத நம்பிக்கைகளை நாசம் செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். தொன்று தொட்டு இந்து மதத்தின் மேல் நடக்கும் அநியாயம் என்றே கூறவேண்டும்.

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X