'ஜெ.,க்கு 'ஸ்லோ பாய்சன்'கொடுத்து கொன்ற கும்பல்': அமைச்சர் சீனிவாசன் 'திடுக்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ.,க்கு 'ஸ்லோ பாய்சன்'கொடுத்து கொன்ற கும்பல்' :
அமைச்சர் சீனிவாசன் 'திடுக்'

நிலக்கோட்டை: ''சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவுக்கு, கொடுக்க கூடாத மருந்துகளை கொடுத்து, ஸ்லோ பாய்சன்' மூலம் கொலை செய்தது ஒரு கும்பல்,'' என நேற்று நிலக்கோட்டையில் நடந்த தொகுதி, அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசினார்.


கூட்டத்தில் சீனிவாசன் பேசியதாவது:

தினகரனும், ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தனர்;

முடியவில்லை. ஒரு வழக்கில், தினகரனும், ஜெயலலிதாவும் சிக்கியிருந்தனர்.

ஜெயலலிதா, அமைச்சர் சீனிவாசன்


அந்த வழக்கில், தன்னை விடுவித்துக்கொண்டு, ஜெயலலிதாவை சிக்க வைத்தவர் தான் தினகரன். இது தெரிந்ததும், தினகரனை வீட்டை விட்டு துரத்தினார். ஜெயலலிதா.வீட்டிலிருக்கும் போது, ஜெயலலிதாவுக்கு சர்க்கரை வியாதியை அதிகரித்து, அதற்கு எந்த மருந்தையெல்லாம் கொடுக்கக் கூடாதோ

Advertisement

அவற்றை கொடுத்து, 'ஸ்லோ பாய்சன்' என்று சொல்வார்களே, அப்படி மெதுவாக விஷம் ஏற்றி கொலை செய்தது ஒரு கும்பல். அந்த கும்பலுடன், நிலக்கோட்டை தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த தங்கதுரையும் சென்றுள்ளார். இந்த ஆட்சிக்கு துரோகம் செய்த அவருக்கு, தக்க பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dominic Rajendran - mumbai,இந்தியா
13-நவ-201810:20:34 IST Report Abuse

Dominic Rajendranதீண்டத்தகாதவர்களை, சமூகத்தில் நலிவுத்தோரை உயர்வான பாதையில் நடக்கச் செய்தது திராவிட கட்சிகள். அது கண்டு பொறுக்கமாட்டாதவர்கள் இன்னல் அடையவேண்டாம். தமிழ்நாட்டில் சாதியோடு வாழ்வேன் என்பவர் வாழுங்கள், மத்தவர்களும் வாழட்டும் .

Rate this:
rsudarsan lic - mumbai,இந்தியா
12-நவ-201816:15:02 IST Report Abuse

rsudarsan licநான்கு கல்யாணம் செய்து கொள்வது திராவிடம் , ஸ்டாலின் எனும் பெயர் கொள்வது dravidam, சொந்த நாட்டுக்கு எதிராக பிரிவினை , பக்கத்து நாட்டிலும் பிரிவினை பேசுவது dravidam, ஊழல் புரிவது dravidam, சாராய விற்பனையை அரசே நடத்துவது dravidam. இன்றைய தமிழ் நாட்டை முதல் ஐந்து மாநிலங்களில் ஒன்றாக உயர்த்தி kaattungal, பிறகு pesungal.

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-நவ-201804:47:56 IST Report Abuse

Manianஒன்றை விடுவிட்டிர்களே சாராயமும் ஸ்லோ பாய்சன்தானே ஜெயா மட்டுமில்லை, அவரது தொடர்களு இல்லே இப்போ மெதுவாக சாகபோரானுக? அப்பாலே, கள்ள ஓட்டு கந்தசாமிகள், ஓடடை விற்கும் ஓடசாமிகள் எங்கே இருந்து வருவார்கள்?...

Rate this:
yila - Nellai,இந்தியா
12-நவ-201815:25:11 IST Report Abuse

yilaதமிழ்நாடே பேசி முடித்து விட்டதை அமைச்சர் இப்போதுதான் துவங்குகிறார்....இதுவாவது உண்மையாக இருக்குமா? அந்த ஆணையம் ஒன்னும் சொல்லாதுங்களா?

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
13-நவ-201821:10:56 IST Report Abuse

Sathish நீங்க பேசி முடித்து என்னத்த கிழிச்சீங்க? அடுத்த முறை தினகரன் தேர்தலில் போட்டியிட்டால் ஓட்டுக்கு எவ்வளவு தருவார் என்கிற சிந்தனைதானே இருக்கும் உங்கள் மனதில்....

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X