வருவாய் அள்ளித்தரும் மலைவேம்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் அள்ளித்தரும் மலைவேம்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 வருவாய் அள்ளித்தரும் மலைவேம்பு சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

உடுமலை:மரப்பயிர்கள் பொதுவாகவே வறட்சியை தாங்கி வளரக்கூடிய தன்மையுடையவை. அதிக பராமரிப்பும் தேவையில்லாத மரப்பயிர்கள் சிறந்த வருமானத்துக்கும் வழிவகை செய்து வருகின்றன.தேக்கு, குமிழ், ஈட்டி உள்ளிட்ட பலவகையான மரப்பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், மர பயிர்கள் சாகுபடி செய்தால், ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், விவசாயிகள் இந்த சாகுபடி மேற்கொள்ள தயக்கம் காட்டுவர்.இந்நிலையில், மரப்பயிர்களில் வேகமான வளர்ச்சி மற்றும் சிறந்ந வருவாய்க்கு எடுத்துக்காட்டாக மலைவேம்பு விளங்கி வருகிறது. மற்ற மரப்பயிர்களை காட்டிலும், அதீத வளர்ச்சி உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.பிளைவுட், பேப்பர் மற்றும் தீக்குச்சி உற்பத்திக்கு பயன்படுத்தி வரும், மலை வேம்பு சாகுபடியை விவசாயிகள் ஆர்வத்தோடு மேற்கொள்ள துவங்கியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக இதன் சாகுபடியும் அதிகரித்துள்ளது.உடுமலை சுற்றுவட்டார பகுதிகளிலும், பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏக்கருக்கு, 1,200 நாற்று வரை நடவு செய்யப்படுகிறது. தொழுஉரங்கள் வைத்து நடவு செய்தால், போதுமானதாக தெரிவிக்கின்றனர்.பக்க கிளைகள் விடாமல் கவாத்து செய்துவிட வேண்டும் எனவும், சொட்டுநீர் பாசனம் அமைத்து தண்ணீர் பாய்ச்சவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.நடவுசெய்த, ஏழு ஆண்டுகளிலிருந்து அறுவடை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏழு ஆண்டுகளில் மரம் ஒருடன் வரை மகசூல் கிடைக்கிறது. அதன்பின், ஆண்டுதோறும் மரத்தின் மதிப்பு உயர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மற்ற மரப்பயிர்களை காட்டிலும் மலைவேம்பின் வளர்ச்சி மலைக்க வைப்பதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X