ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு : அ.தி.மு.க., ஆவேசம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு : அ.தி.மு.க., ஆவேசம்

சென்னை: 'சர்கார்' படத்தில் இடம்பெற்றிருந்த, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி, அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியதற்கு, நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்திருந்தார்.

ரஜினி, சர்கார், அதிமுக

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., நாளிதழில், கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 'சர்கார்' படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள், அ.தி.மு.க.,வினரை ஆத்திரமூட்டின. அவற்றை நீக்கக் கோரி, தியேட்டர்கள் முன் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, படத்திலிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.

இது தொடர்பாக, ரஜினி, 'தணிக்கை குழு தணிக்கை செய்து, படத்தை வௌியிட்ட பின், அந்த படத்திலிருந்து, சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று, போராட்டம் நடத்துவதும்,திரையிட தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்கு புறம்பான செயல்கள். இதை, நான் வன்மையாக கண்டிக்கிறேன்' என, கூறியிருந்தார். இது, அ.தி.மு.க.,வுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து, அ.தி.மு.க., நாளிதழில், நேற்று கட்டுரை வௌியிடப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது: உச்ச நட்சத்திரமே, உங்க உள்ளத்தை திறந்து சொல்லுங்கள். எல்லா சான்றிதழ்களும் முடிந்து, வியாபாரத்திற்கு வந்த, 'ஹார்லிக்ஸ்' பாட்டிலை, வீட்டிற்கு வாங்கி வந்து திறக்கும்போது, அதன் உள்ளே, ஒரு பல்லி கிடந்தால், எல்லா சான்றிதழ்களும் பெறப்பட்ட ஹார்லிக்சை, கீழே எடுத்து போய் கொட்டுவீர்களா; இல்லை, சான்றிதழ்கள் சரியாக தான் இருக்கிறது என்று, செத்து கிடக்கும் பல்லியோடு சேர்த்து, அதுவும் சத்து தான் என்று, பருகுவீர்களா? எதிர்காலத்தில்

Advertisement

முதல்வராகி விடலாம் என்ற, கவனில் மிதக்கிற, நடிகர் விஜய்க்கும், சரியான புரிதல் இல்லாமல், அரசாங்கத்திற்கே ஆலோசனை சொல்லி அலைகிற, அரைவேக்காட்டு இயக்குனர் முருகதாசுக்கும், ரஜினி அறிவுரை சொல்ல வேண்டும். அதை விடுத்து, 'கிணறு வெட்டுன ரசீது, என்கிட்ட இருக்கு' என சொல்லும், வடிவேலு காமெடியைப் போல, தணிக்கை சான்றை சுட்டிக்காட்டி, ஒரு தவறுக்கு, ரஜினி வக்காலத்து வாங்கலாமா? இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.Krishnan - chennai,இந்தியா
13-நவ-201814:11:03 IST Report Abuse

G.Krishnanஇலவசம் கொடுப்பது தவறு என்றால் முதலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கொடுத்த கலர் டிவியை எரித்துவிட்டு பின்பு மிக்ஸி, கிரைண்டர் ஆகியவற்றை எரித்தால் அது சரியான விமர்சனமாக இருக்கும் . . . . .அதே அரசு தான் பண்ணிரெண்டாம் வகுப்புவரை கல்வியை இலவசமாக தருகிறது . . . . . .அராசாங்க பள்ளிகளில் புத்தகம், பை, காலணிகள் போன்றவற்றை இலவசமாக தருகிறார்கள். . . .அப்ப புத்தகத்தை தீயில் போட்டு ஏரிப்பாரா?. . . . . .இல்லாதவர்களுக்கு / ஏழைகளுக்கு இலவசங்கள் கொடுப்பதை தடுக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்ட பின்பு இவர் என்ன நீதிபதிக்கும் மேல அவ்வளவு பெரிய அப்படக்கரா? . . . . .

Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
12-நவ-201810:07:51 IST Report Abuse

Nisha Rathiசரியான பதிலடி கொடுப்பவர் சத்யராஜ் மட்டும் டான்

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
11-நவ-201816:24:32 IST Report Abuse

தமிழ் மைந்தன் மீண்டும் 1996 போல ரஜினியை நம்பும் திமுக. ஆனால் கூட்டணியில் மூப்பனாரோ கருனாநிதியோ இல்லை.......இப்போது கமெடி ஸ்டாலினும் கட்சி தலைவர் வாசன் மட்டுமே........எனவே..............

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X