வறட்சி, நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சி, நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிப்பு

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை:வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலால், பொருளாதார இழப்பைசந்தித்தும், தென்னை வளர்ச்சி வாரியம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.உடுமலை சுற்றுப்பகுதிகளில், 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. கடந்த, 2015 முதல் பருவமழை போதியளவு பெய்யாமல், வறட்சி ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, தென்னை மரங்களுக்கு, தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்கள் தண்ணீரின்றி கருகின.இந்தாண்டு தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தும், வெள்ளை ஈ தாக்குதல், சாகுபடியில், அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உடுமலை தாலுகாவில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்கள், இத்தாக்குதலால், பாதித்து, பச்சையம் இழந்து, கருப்பு நிறமாக காட்சியளிக்கின்றன.ஒவ்வொரு ஏக்கரிலும், வறட்சி மற்றும் நோய்த்தாக்குதலுக்கு, சராசரியாக, 35க்கும் அதிகமான மரங்கள் பாதித்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு அதிகரித்துள்ளது.தென்னை வளர்ச்சி வாரியத்துக்கு, சாகுபடி பரப்பு அதிகரித்தல், நோய் பாதித்த மரங்களை அகற்றி, புதிய கன்று நடவு செய்தல், நோய்த்தாக்குதலுக்கு நிவாரணம் ஆகிய திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததால், இந்த நிதி, தமிழகத்துக்கு குறைவாகவே கிடைப்பதாக, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.தென்னை வளர்ச்சி வாரியத்தால், கோவை, திருப்பூர் மாவட்டங்களில், தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளன. இந்த சங்கத்தினர் மூலம், நோய் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி, வாரியத்திடம் நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என, இரு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X