தேனியில் தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு கவலையில் விவசாயிகள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேனியில் தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு கவலையில் விவசாயிகள்

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தேனியில் தொடர்மழையால் தக்காளி விளைச்சல் பாதிப்பு  கவலையில் விவசாயிகள்

தேனி, தேனி அருகே தொடர் மழையால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.வைகை அணையை ஒட்டிய குன்னுார், அரப்படிதேவன்பட்டி மற்றும் கொடுவிலார்பட்டி, அம்பாசமுத்திரம், கோவிந்தநகரம், நாகலாபுரம், தாடிச்சேரி, வயல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிக பரப்பில் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் டன் விளைச்சல் இருந்தது.இந்தாண்டு தென்மேற்குபருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் தக்காளி செடிகள் நிலத்தில் சாயத்துவங்கின. பழத்தை ஊடுருவி அழுக செய்யும் புழுக்களால், செடிகள் நாசமடைந்தன. இதனால் ஏராளமான பழங்கள் ரோட்டில் வீணாக கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.விவசாயி வனபேச்சி கூறியதாவது: துவக்கத்தில் 3 பறிப்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை. அதன்பிறகு செடிசாய்ந்து புழுதாக்குதல் நோய் ஏற்பட்டு, அனைத்து பழங்களும் அழுக துவங்கியது. செலவு செய்து மருந்துகள் அடித்தும் நோய் பரவுவது குறையவில்லை.15 கிலோ கொண்ட பெட்டி ரூ.175 க்கு தான் விற்பனை ஆனது. தற்போது பழங்கள் அழுகுவதால் வரத்து குறைந்து விலை ரூ.220, ரூ.300 என உயர்ந்து வருகிறது.எனினும் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ள விவசாயிகளுக்கு லாபம் இல்லை. இதனை வேளாண் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகின்றனர்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X