சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் எவை? விபரம் சேகரிக்கும் முன்னோடி வங்கி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் எவை? விபரம் சேகரிக்கும் முன்னோடி வங்கி

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

-நமது நிருபர்-

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவன விபரங்களை, முன்னோடி வங்கி நிர்வாகத்தினர் சேகரித்து வருகின்றனர்.பிரதமர் மோடி, கடந்த 2ம் தேதி, சிறு, குறு, நடுத்தர நிறுவன கடன் மேம்பாட்டு திட்டத்தை துவக்கி வைத்தார். சிறு, குறு நிறுவனங்கள் பெறும் வங்கி கடனில், 2 சதவீதம் மானியமாகவும், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, 3 சதவீதமாக இருந்த வட்டி மானியம் 5 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்துக்காக, மாவட்ட முன்னோடி வங்கி (கனரா) சார்பில், மாவட்டம் முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் விபரங்களை சேகரிக்க உள்ளனர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், கனரா வங்கி, இந்த திட்டத்தை முன்னெடுத்து செல்கிறது. முதற்கட்டமாக, மாவட்ட சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. மாவட்ட தொழில்மையம் அளித்த விவரத்தின்படி, திருப்பூரில் 34,800 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன.தொடர்ந்து, அனைத்து வங்கிகளிலும், கணக்கு வைத்துள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவன விபரம் சேகரிக்கப்படுகிறது. குறிப்பாக, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்றோர் முழு விபரம் பெறப்படுகிறது. இவ்விபரங்கள், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள, டில்லி அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.அனைத்து வங்கிகளும், தங்களிடம் கணக்கு வைத்துள்ள, சிறு, குறு, நடுத்தர நிறுவன விபரங்களைவழங்க வேண்டும். பெறப்படும் விபரங்களை மையமாக கொண்டு, நிறுவனங்களை அடையாளம் கண்டு, எளிமையாக வங்கி கடன் பெற, வழிவகை செய்யப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X