உற்பத்தி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தி!

Added : நவ 10, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 உற்பத்தி!

 வனத்துறை பண்ணையில் மூங்கில் நாற்று... விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் சாகுபடி-உடுமலை:உடுமலை, அமராவதி, மூங்கில் பண்ணையில், பிரமிக்க வைக்கும், 42 வகை மூங்கில் வகைகள் உள்ளன; இங்கு நாற்றுக்கள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதியில், வன மரபியல் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட மற்றும் ஆய்வுகள் மூலம் உருவாக்கப்பட்ட, 42க்கும் மேற்பட்ட மூங்கில் வகைகளுடன் கூடிய, மூங்கில் பண்ணை உள்ளது.வழக்கமாக வனங்களில், முட்களுடன் கூடிய மூங்கில்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், பல வகையான அரிய வகை மூங்கில்கள், பண்ணையில் உள்ளது.புல் இனத்தில் பெரிய வகையான மூங்கில்களுக்கு பல சிறப்புகள் உள்ளன. இரவு, பகல் என, 24 மணி நேரமும், நச்சுக்காற்றை கிரகித்துக்கொண்டு, ஆக்சிஜன் வழங்குகின்றன.மேலும், ஒரு நாளைக்கு, 30 முதல் 35 செ.மீ., வரை மூங்கில்கள் வளரும் சிறப்பு கொண்டது. ஓங்கி உயர்ந்து, 80 அடி வளரும் மூங்கில்கள், காட்டு மூங்கில், பெரு மூங்கில், மருத்துவத்திற்கு பயன்படும், பாலிமோர்பா, நீளமாக வளரும், லாங்கிஸ்பேதஸ், அதிக பசுமை உள்ள பாபுசாவல்கரி, அதிக உறுதித்தன்மை உள்ள, பேம்புசா பல்கோவா, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மாசை தடுக்கும், மெல்கோனா பேக்சிபைரா, கைவினை பொருட்கள் உற்பத்தி செய்ய, சிக்கிமென்சிஸ், புத்தா பள்ளி என ஒவ்வொன்றும், பிரமிப்பை ஏற்படுத்தும், 42 அரிய வகை மூங்கில் இனங்கள் மூங்கில் பண்ணையில்உள்ளன.குறைந்த விலையில்...வன மரபியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:கட்டுமான பணி, அழகு சாதனப்பொருட்கள், பர்னிச்சர்கள் தயாரிப்பு என மூங்கிலுக்கு தற்போது தேவை அதிகரித்துள்ளது. நாற்றுப்பண்ணையில் பல்வேறு வனப்பகுதிகள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, 42 மூங்கில் வகை உள்ளது.மர வகைகளிலேயே, தினமும், 35 செ.மீ.,வரை வேகமாக வளரும் ஒரே மரமாகும். முட்கள் இல்லாத மூங்கில், ஒரு ஏக்கருக்கு, 120 நாற்று நடவு செய்தால், 5-10 துார் விடும். ஐந்துஆண்டில், 60 அடி உயரம் வரை வளரும்; பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும். இரண்டு ஆண்டுக்கு ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம். எளிதாக வெட்டவும் முடியும். முதல் இரண்டு ஆண்டுகளில், ஊடுபயிர் சாகுபடியும் மேற்கொள்ள முடியும்.விவசாயிகளுக்கு மற்ற பயிர் சாகுபடியை விட, மூங்கில் சாகுபடி அதிக வருவாய் கொடுக்கும். பண்ணையில், ஆண்டு முழுவதும் மூங்கில் நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.இவ்வாறு, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-201804:19:00 IST Report Abuse
Bhaskaran தண்ணீரை அதிகம் உறிஞ்சும் தாவர இனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X