அமராவதி சர்க்கரை ஆலையில் 1.25 லட்சம் டன் கரும்பு பதிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி சர்க்கரை ஆலையில் 1.25 லட்சம் டன் கரும்பு பதிவு

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு, கணியூர், கொமரலிங்கம், நெய்க்காரபட்டி, பழநி மற்றும் ஆலைபகுதி ஆகிய ஐந்து கோட்டப் பகுதி விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படும். ஆண்டு தோறும் ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை ஆறு மாதம் ஆலை அரவை பருவமாகும்.கடந்த ஆண்டுகளில் போதிய மழைபொழிவு இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதனால் 2016 -17, 2017 -18 ம் ஆண்டில் கரும்பு அரவை நடக்கவில்லை. இந்த ஆண்டில் போதிய மழை பெய்துள்ளதால், கரும்பு சாகுபடி மீண்டும் நடக்கிறது.அடுத்த ஆண்டு கரும்பு அரவை தொடங்க, தீவிர ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், 2018 -19 ம் ஆண்டு அரவை பருவ இலக்காக ஒரு லட்சத்து 35 ஆயிரம் டன் (நான்காயிரம் ஏக்கர் ) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான கரும்பு பதிவு கடந்த, ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து வருகிறது.கரும்பு பெருக்கு அலுவலர் பெலிக்ஸ் கூறுகையில், ''2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் அரவைக்கான கரும்பு பதிவு தீவிரமாக நடக்கிறது. இதுவரை, 3,000 ஏக்கர் ( 1,25,000 டன் ) பதிவாகி உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X