மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானிய ஸ்கூட்டர் வழங்கும் விழா

Added : நவ 10, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலையில், மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 267 பேருக்கு மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது.பணிக்குச்செல்லும் பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் செயப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், உடுமலை நகராட்சி, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் வசிக்கும், 553 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில், 66.75 லட்சம் ரூபாய் மதிப்பில், 267 பேருக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். அமைச்சர் ராதாகிருஷ்ணன், எம்.பி., மகேந்திரன் ஆகியோர் பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினர்.அமைச்சர் பேசுகையில், 'கால்நடைத்துறை சார்பில், மேற்கு மாவட்டங்களில் பொருளாதார முன்னேற்றத்திற்காக, கிராமங்களிலுள்ளவர்களுக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் 50 கோடி ரூபாய் செலவில், 77 ஆயிரம் பேருக்கு, தலா 50 நாட்டு கோழிகள் வழங்கும் திட்டமும் விரைவில் துவங்கும்,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X