கடை போகத்தில் கிழங்கு உற்பத்தி பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கடை போகத்தில் கிழங்கு உற்பத்தி பாதிப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

விலை உயர்வால் கிராக்கி

ஊட்டி:நீலகிரியில், தரமற்ற விதை உருளைக் கிழங்கால், கடைபோகத்தில், 2,000 டன் உருளைக்கிழங்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.நீலகிரியில், ஒவ்வொரு போகத்திலும் சராசரியாக, 2,000 ஏக்கர் பரப்பில், உருளைக்கிழங்கு பயிர் செய்யப்படுகிறது. நடப்பாண்டில், கடை போகத்துக்கான விதை உருளைக்கிழங்கு, ஊட்டி, கூட்டுறவு துறையின் கீழ் உள்ள, என்.சி.எம்.எஸ்., மூலம், 67 லட்சம் மதிப்பில், சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதில், 500 ஏக்கரில் பயிர் செய்யப்பட்ட உருளைக்கிழங்கில், அழுகல் நோய் தாக்கி, செடிகள் கருகியதால், விவசாயிகள் நஷ்டமடைந்தனர்; இதற்கு, தரமற்ற விதை உருளைக்கிழங்கு தான் காரணம் என, குற்றம் சாட்டப்பட்டது.நீலகிரியில், சராசரியாக ஒவ்வொரு போகத்துக்கும், 6,000 டன் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, கடை போகத்தில் இதுவரை, 3,000 டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில், 1,000 டன் அளவுக்கு அறுவடை செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.உற்பத்தி குறைந்த காரணத்தால், உருளைகிழங்குக்கு கிராக்கி ஏற்பட்டதால், கடந்த வாரத்தில், 45 கிலோ கொண்ட ஒரு துண்டு அதிகபட்சம், 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரு நாட்களாக விலை அதிகரித்து, 1,600 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் நீலா கூறுகையில், ''பெங்களூரு தனியார் நிறுவனத்திலிருந்து விதை உருளைக்கிழங்கு வாங்கப்பட்டது. நிறுவன அதிகாரிகள், விதையை ஆய்வுக்கு எடுத்து சென்றுள்ளனர். ஆய்வறிக்கையில், பாதிப்பு இருப்பதாக தெரியவந்தால், விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X