குப்பையால் சுகாதாரம் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையால் சுகாதாரம் பாதிப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 குப்பையால் சுகாதாரம் பாதிப்பு

கூடலுார்:
கூடலுார் நகராட்சி பகுதியில், திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால், சுகாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளது.கூடலுார், நகராட்சி பகுதியில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் சார்பில், திறந்த வெளியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டு, குப்பை தொட்டிகள் அகற்றப்பட் டன. இதற்கு மாற்றாக கடைகள், வீடுகளில் மட்கும் குப்பை, மட்கா குப்பைகளை தனித் தனியாக பிரித்து, அப்பகுதிக்கு வாகனங்களில் வரும் நகராட்சி ஊழியர்களிடம் வழங்க நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், நகரப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலையோரங்களில் மீண்டும் திறந்த வெளியில் குப்பை குவிந்துள்ளது. பல இடங்களில் குப்பைகளும் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், சுகாதாரம் பாதிக்கப்பட்டு, நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.பொதுமக்கள் கூறுகையில்,'நகராட்சி பகுதியில், திறந்த வெளியில் குப்பை கொட்ட தடை விதித்திருந்தாலும், அதனை தடுக்க முடியவில்லை. நகரில் பல பகுதிகளில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவது, தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனை தடுக்க நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X