அவசர சிகிச்சை பிரிவு அமைப்பது அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அவசர சிகிச்சை பிரிவு அமைப்பது அவசியம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார் மக்கள் கோரிக்கை

கூடலுார்:கூடலுார் அரசு மருத்துவமனையில், நுழைவு வாயில் பகுதியில் உள்ள கட்டடத்தின், கீழ் தளத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவும்; முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில், போதுமான இடவசதியில்லை.அதே போன்று, வாகனங்கள் நிறுத்த, நோயாளிகளை இறக்கி அழைத்து செல்ல போதுமான வசதியில்லை. இதனால், வாகன விபத்தில் சிக்கி காயமடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் உள்ளது.இந்நிலையில், கடந்த வாரம், நாடுகாணி அருகே, அரசு பஸ் கவிழ்ந்த விபத்தில், 46 பேர் காயமடைந்தனர். இடபற்றாகுறையால், அவர்களை படுக்க வைப்பதிலும் சிகிச்சை அளிப்பதிலும், மருத்துவமனை ஊழியர்கள் கடும் சிரமப்பட்டனர். இதுபோன்ற சூழல் அடிக்கடி ஏற்படுவதால், அனைத்துவசதியுடன் கூடிய, அவசர சிகிச்சை பிரிவு அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'தற்போதுள்ள அவசர சிகிச்சை பிரிவில் போதிய இடவசதியில்லாததால், விபத்துகளின் போது, கடும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய அவசர சிகிச்சை பிரிவு துவங்க வேண்டும்' என்றனர்.டாக்டர்கள் கூறுகையில், 'இங்குள்ள தலைமை மருத்துவர் குடியிருப்பு கட்டடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதனை அகற்றி விட்டு, அப்பகுதியில் புதிய அவசர சிகிச்சை பிரிவு அமைக்க பொதுப்பணி துறை மூலம், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நிதி கிடைத்த உடன் பணி துவங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X