இருள் சூழ்ந்த பாட்டவயல் புகார் கொடுத்தும் பலனில்லை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருள் சூழ்ந்த பாட்டவயல் புகார் கொடுத்தும் பலனில்லை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பந்தலுார்:பந்தலுார் அருகே, மாநில எல்லையான பாட்டவயல் பகுதியில், தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக-கேரளா எல்லையாக பாட்டவயல் பகுதி உள்ளது. அதில், பிதர்காடு பகுதியிலிருந்து பாட்டவயல் வரையிலான. 3 கி.மீ., தொலைவு உள்ள சாலையில் தெருவிளக்குகள் அனைத்தும் பழுதடைந்து காணப்படுகிறது.பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைக்காததால் இரவில் மக்கள் வெளியில் நடமாட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறுத்தை, யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இரவு மற்றும் காலை நேரங்களில் மதரஸா மற்றும் பள்ளிவாசல்களுக்கு செல்லும் மக்களும், இரவு, அதிகாலையில் பஸ்களுக்கு செல்லும் பயணிகளும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும், சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர் சூழ்ந்துள்ளதால், சாலையோரம் யானை நின்றாலும் தெரியாத நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம், இப்பகுதி மக்கள் நேரில் மனு கொடுத்து பல மாதங்கள் கடந்தும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.எனவே, இப்பகுதியில் அசம்பாவிதம் நடக்கும் முன்பு, புதரை அகற்றவும், தெருவிளக்கு அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X