ராமாயண யாத்திரைக்கு சுற்றுலா ரயில் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமாயண யாத்திரைக்கு சுற்றுலா ரயில் இயக்கம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ராமாயண யாத்திரை ரயில், மதுரையிலிருந்து, 14ம் தேதி புறப்பட உள்ளது.இது குறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொதுமேலாளர், ரவிகுமார்கூறியதாவது:
ராமாயாண காவியம் நிகழ்ந்த இடங்களை பார்த்து, சுற்றுலா பயணியர், நம் பாரம்பரியத்தை உணரும் வகையில், ராமாயண யாத்திரை சிறப்பு ரயில், 14ம் தேதி மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது.இதில், கர்நாடகாவில், ஹம்பி; மஹாராஷ்டிராவில் நாசிக்; உ.பி.,யில், சித்திரகூடம், அலகாபாத், அயோத்தி; பீஹாரில் தர்பங்கா, சீதாமார்ஹி; மேற்கு வங்கத்தில் நந்திகிராமம்; நேபாளத்தில் சீதை பிறந்த இடமாக கருதப்படும் ஜனக்புரி; தமிழகத்தில், ராமேஸ்வரம், தேவிபட்டினம் ஆகிய இடங்களுக்கு சென்று, மதுரை திரும்பலாம்.
இதில், ஒருவருக்கு, 15 ஆயிரத்து, 830 ரூபாய் கட்டணம்.கோவா சுற்றுலாமதுரையில் இருந்து, டிச., 14ல், கோவா; கர்நாடாகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கும், ஐந்து நாட்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஒருவருக்கு, கோவா சுற்றுலாவுக்கு, 4,725 ரூபாய்; மூகாம்பிகை கோவிலுக்கு, 6,930 ரூபாய் கட்டணம்.அஜந்தா எல்லோராவுக்கு, 10 நாள் சுற்றுலா, மதுரையில் இருந்து, டிச., 2ல் சென்னை வழியாக, சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. ஒருவருக்கு, 10 ஆயிரத்து, 100 ரூபாயும் கட்டணம்.
மேலும் தகவல்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்துக்கு, 90031 40680, 90031 40681 என்ற மொபைல் போன் எண்களிலும், www.irctctourismcom என்ற இணைய தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு ரவிகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X