விழிப்புணர்வுக்கு ஆள்தேடும் டி.டி.சி.பி.,: ஆணையர் கடிதத்தால் சர்ச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வுக்கு ஆள்தேடும் டி.டி.சி.பி.,: ஆணையர் கடிதத்தால் சர்ச்சை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'நகர், ஊரமைப்புத்துறையின் பணிகள் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யுங்கள்' என, அத்துறையின் ஆணையர், பீலா ராஜேஷ், உரிமம் பெற்ற சர்வேயர்களுக்கு எழுதிய கடிதம் சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்தில், சென்னை பெருநகருக்கு வெளியில் உள்ள பகுதிகள், நகர், ஊரமைப்பு துறையான, டி.டி.சி.பி., கட்டுப்பாட்டில் வருகிறது. இப்பகுதிகள், உள்ளூர் திட்ட குழுமங்கள், மண்டல அலுவலகங்கள் என, நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., அளவுக்கு, டி.டி.சி.பி., பணிகள் குறித்து, பொது மக்கள் மத்தியில் தெளிவில்லை.
இந்நிலையில், உரிமம் பெற்ற சர்வேயர்கள் மற்றும் கட்டுமான துறையினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், சமீபத்தில் நடந்தது. திட்டம்இக்கூட்ட முடிவுகள்தொடர்பாக, டி.டி.சி.பி., ஆணையர், பீலா ராஜேஷ், கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகளுக்கு, டி.டி.சி.பி., பணிகள் குறித்து, விரிவான கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
டி.டி.சி.பி., பணிகள் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதன் ஒரு பகுதியாக, வீடு வாங்குவோர் அறிந்து கொள்ளும் வகையில், நகர், ஊரமைப்புத் துறை குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை, உரிமம் பெற்ற சர்வேயர்கள், கட்டுமான துறை சங்கங்கள் வெளியிட வேண்டும். இதுகுறித்த, துண்டு பிரசுரங்களை வெளியிடலாம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத் தலைவர், சதானந்த் கூறியதாவது:டி.டி.சி.பி., அதிகாரிகளின் புதிய முயற்சியை வரவேற்கிறோம். இதற்காக, தனியார் நிறுவனங்களை அழைத்துள்ளது, எப்படி நடைமுறைக்கு சாத்தியமாகும் என, தெரியவில்லை.ெவளிப்படைதுறை தொடர்பான உத்தரவுகள், அறிவிப்புகள் மற்றும் கூட்ட நிகழ்வுகள் குறித்த விபரங்களை வெளிப்படையாக்க வேண்டும்.
திட்ட அனுமதிக்கு அப்பால், தங்களது பணிகளை, டி.டி.சி.பி., அதிகாரிகள் உணர்ந்து செயல் பட்டாலே, அதுபற்றிய விபரங்கள், பொது மக்களுக்கு முறையாக சென்றடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X