கொசு வளர்த்ததாக ரூ.5 ஆயிரம் அபராதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொசு வளர்த்ததாக ரூ.5 ஆயிரம் அபராதம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை, சிவகங்கை மாவட்டத்தில் கொசு உருவாக காரணமாக இருந்தோரிடம் சுகாதாரத்துறையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்தனர்.தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி அமைப்பினர், சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் 9 பேருக்கு டெங்கு, 6 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருந்தது. மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கலெக்டர் ஜெயகாந்தன், சுகாதார துணை இயக்குனர் யசோதாமணி தலைமையில் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் கொசு உருவாக காரணமாக இருந்தோரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டன. பன்றி காய்ச்சலை தடுக்க, சுத்தமாக கை கழுவது குறித்து செயல்விளக்கம் அளித்து வருகின்றனர். நேற்று சிவகங்கை ஆயுதப்படை அலுவலகத்தில் போலீசாருக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கலெக்டர், ஜெயச்சந்திரன் எஸ்.பி., சுகாதார துணை இயக்குனர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X