விவசாயிகள் போராட்டம் உயர் நீதிமன்றம் அனுமதி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் போராட்டம் உயர் நீதிமன்றம் அனுமதி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:விவசாய நிலங்களில், மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஈரோடு மாவட்ட விவசாய சங்கம் சார்பில், விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த, அனுமதி கோரப்பட்டது.இதற்கு, சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விவசாயிகள் சங்கம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'அமைதி வழியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதில், போலீசார் குறுக்கிடக் கூடாது' என, உத்தரவிட்டார்.போதிய பாதுகாப்பு வழங்க ஏதுவாக, போராட்ட தேதியை, ஒரு வாரத்துக்கு முன், போலீசாரிடம் தெரிவிக்கும்படி, நீதிபதி அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X