போலீஸ் டைரி!| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி!

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கல்லுாரி மாணவி தற்கொலைராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, ஸ்ரீபதி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகள் சவுமியா, 19. தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். கல்லுாரி கட்டணம் செலுத்த பணம் கேட்டார். தர மறுத்ததால், விரக்தியடைந்த அம்மாணவி, சாணிப்பவுடர் கரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.கொலை மிரட்டல் விடுத்தவர் கைதுஆர்.எஸ்.புரம், மெக்ரிக்கர் ரோட்டை சேர்ந்தவர் அருண் பிரகாஷ், 32. இவரது தங்கையை, மதுக்கரை, பராசக்தி நகரை சேர்ந்த நாகேந்திர கிருஷ்ண குமார், 37, என்பவர் ஒரு தலையாக காதலித்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அருண் பிரகாஷ் வீட்டுக்குச் சென்ற, நாகேந்திர கிருஷ்ண குமார், அவரிடம் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததால், ஆர்.எஸ்.புரம் போலீசார் கைது செய்தனர்.'மொபட்' மீது பைக் மோதல்; ஒருவர் பலிகோவை, சாய்பாபா காலனி, ரமணா லே-அவுட்டை சேர்ந்தவர் கணேசன், 49. கடந்த, 6ல் பாரதி பார்க் இரண்டாவது வீதியில் தண்ணீர் தொட்டி அருகே மொபட்டில் சென்றார். அவ்வழியாக, அதிவேகமாக வந்த பைக், மொபட் மீது மோதியது. அதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணேசன், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியை சேர்ந்த நவீன்,19, மீது, போக்குவரத்து புலனாய்வு மேற்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அ.தி.மு.க., தொண்டர் பலிஆவாரம்பாளையம் ரயில்வே கேட் அருகே, நேற்று காலை ரயிலில் அடிபட்டு ஒருவர் சடலமாக கிடந்தார். சுமார், 55 வயது மதிக்கத்தக்க, கருப்பு நிறமுடைய அவர், 'லைட் ப்ளூ' கலரில், மஞ்சள் கட்டம் போட்ட அரை கை சட்டை, அ.தி.மு.க., பார்டர் வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். அவரது கையில் இரட்டை இலை சின்னம், ஜி.பாலகிருஷ்ணன் என்ற பெயரும் பச்சை குத்தப்பட்டிருந்தது. சடலமாக கிடந்தவர் அ.தி.மு.க., தொண்டராக இருக்கலாம் என, தெரிகிறது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X