பொறுப்பாளர் நியமனமும் மாற்றமும் தி.மு.க.,வுக்கு வெற்றி தருமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொறுப்பாளர் நியமனமும் மாற்றமும் தி.மு.க.,வுக்கு வெற்றி தருமா?

Added : நவ 11, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 பொறுப்பாளர் நியமனமும் மாற்றமும்  தி.மு.க.,வுக்கு வெற்றி தருமா?

வரும் லோக்சபா தேர்தலுக்கான, 40 தொகுதிகளின் பொறுப்பாளர்கள் நியமனமும், மாற்றமும், தி.மு.க.,வுக்கு வெற்றியை தேடி தருமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளுக்கு, தலா, இருவர் வீதம், பொறுப்பாளர்கள், 80 பேரை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நியமித்தார். நியமனம்இந்த பட்டியலில் இடம் பெற்ற, 80 பேர்களுக்கு, லோக்சபா தேர்தலில், 'சீட்' கிடையாது என்பது, உறுதியாகி உள்ளது.இந்த பட்டியலில், 34 எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றிருந்தனர்.
சென்னை, அறிவாலயத்தில் நடந்த, தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய, மாவட்ட செயலர்கள் சிலர், 'எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல், பொறுப்பாளர்களை நியமித்திருப்பதாக, நாங்கள் கருதுகிறோம்' என, எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை.அதற்கு காரணம், தேர்தல் நேரத்தில், கட்சி தலைமையில் இருந்து கொடுக்கும் பணம், முறையாக செலவழிக்கப்படுகிறதா; அது போய் சேர வேண்டிய இடத்திற்கு சேருகிறதா என்பதை, கண்காணிக்க தான், மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தொகுதிகளில், மாவட்ட செயலர்களுக்கு தெரியாமல் நடக்கும் தவறுகளை கண்காணித்து, அதை சீர்படுத்தவும், வெற்றி வாய்ப்பு நிலவரம், பணம் பட்டுவாடா செய்யப்பட்ட விபரங்களை, கட்சி தலைமைக்கு தெரியப்படுத்துவதற்கு தான், இவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த, 34 எம்.எல்.ஏ.,க்களும், தங்கள் தொகுதி பணிகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதால், பொறுப்பாளர் பதவியிலிருந்து, 34 எம்.எல்.ஏ.,க்களும்,சமீபத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பதிலாக, கூடுதல் பொறுப்பாளர்களாக சிலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில், வேடிக்கை என்னவென்றால், பொறுப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட விபரம் தெரியாமல், சமீபத்தில், ராஜபாளையம், எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், துாத்துக்குடி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
கேள்வி
கூடுதல் பொறுப்பாளர்கள் பட்டியலில், வடசென்னைக்கு சோமு, காஞ்சிபுரத்திற்கு வைத்தியலிங்கம், பெரம்பலுாருக்கு மணிமாறன், தென்காசிக்கு குழந்தை தமிழரசன், திருநெல்வேலிக்கு ஜெயக்குமார் என, 14 லோக்சபா தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டு ள்ளனர். மேலும், ஏற்கனவே இருந்தவர்களுக்கு பதிலாக, நீலகிரிக்கு வழக்கறிஞர் சரவணன், கடலுாருக்கு அப்பாவு, கோவைக்கு பரணி கே.மணி, மயிலாடுதுறைக்கு புகழேந்தி, கோவை வீரகோபால் ஆகியோரையும், மாற்றி அறிவித்துள்ளனர். எனவே, 40 தொகுதிகளின் பொறுப்பாளர்கள் நியமனமும், மாற்றமும், தி.மு.க.,வுக்கு வெற்றியை தேடி தருமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-நவ-201816:03:55 IST Report Abuse
Bhaskaran இந்த பொறுப்பாளர்கள் வசூலிப்பாளர்களாகவும் ஒதுக்கீட்டாளர்களாகவும் மாறப்போவது தான் மிச்சம் உனக்கும் பெப்பே உங்க அப்பனுக்கும் பெப்பே தான்
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-நவ-201813:54:19 IST Report Abuse
sridhar மக்கள் உங்களை வெறுப்பாளர்களாக இருக்கிறார்கள். உங்க கட்சி அம்பேல் .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:33:14 IST Report Abuse
Srinivasan Kannaiya செய்த பாவங்களே தீராது...பாவம் தீர இனி இருக்கும் குறை காலத்திற்கு மக்களுக்கு உங்கள் கை காசில் ஏதாவது நலத்திட்டங்களை செய்யுங்கள்... முக்கியமாக இலவச குடிநீரும் இலவச கழிப்பறையும் தாருங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X