கும்கி முகாமில் 'காரல்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கும்கி முகாமில் 'காரல்'

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கும்கி முகாமில் 'காரல்'

பேரூர்:சாடிவயல் யானைகள் முகாமில், 'காரல்' அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை, வனத்துறையினர் நேற்று ஆலோசித்தனர்.கோவை வனக்கோட்டத்தில், தானிக்கண்டி, நரசீபுரம், தடாகம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவைகளால், உயிர் பலி ஏற்படுவதுடன், விவசாய பயிர்களும் பாதிக்கப்படுகின்றன. வேட்டை தடுப்பு காவலர் ஒருவரும் யானை தாக்கியதில் பலியானார்.தொடர்ந்து அட்டகாசம் செய்யும் யானைகளை பிடித்து, 'கரால்' எனப்படும் மரக்கூண்டில் அடைத்து பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது. சாடிவயலில் 'கரால்' அமைப்பதற்கான சாத்தியக்கூறு, சீதோஷ்ண நிலை குறித்து, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வனத்துறை கால்நடை டாக்டர் மனோகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர்.ஏற்கனவே 'கரால்' அமைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிடவும் முடிவு செய்யப்பட்டது. 'கரால்' அமைப்பது, முதுமலையில் இருந்து 'கும்கி'கள் கொண்டு வரப்பட்டது போன்ற, வனத்துறை நடவடிக்கைகளால், விவசாயிகள் திருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X