ஜனவரியில் வேலை நிறுத்தம் மின் வாரிய சங்கங்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜனவரியில் வேலை நிறுத்தம் மின் வாரிய சங்கங்கள் முடிவு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரிய தொழிற்சங்கங்கள், 2019 ஜன., 8, 9ல், வேலைநிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளன.
தமிழ்நாடு மின் வாரியத்தில், 88 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களின் ஊதிய உயர்வு, போனஸ் தொடர்பாக, நிர்வாகம், 17 தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்துகிறது. சென்னை, மின் வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், நேற்று அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் நடந்தது.
இது குறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர், சுப்ரமணியன் கூறியதாவது:மத்திய அரசு அமல்படுத்த உள்ள, புதிய மின் சட்டத்தில், தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக, பல அம்சங்கள் உள்ளன. நாடு முழுவதும், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர் சங்கங்கள், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் உட்பட, 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 8, 9ல், பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன.
அந்த இரு நாட்களும், காலி பணியிடங்களை உடனே நிரப்புவது, மின்சார சட்ட திருத்தங்களை திரும்ப பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் வாரியத்தின், அனைத்து சங்கங்களும் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X