இருபுறமும் தடை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருபுறமும் தடை!

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 இருபுறமும் தடை!

அவிநாசி ரோடு - உடையாம்பாளையம் ரோட்டில்...உயரழுத்த மின் கம்பங்களால் காத்திருக்கும் ஆபத்து கோவை, நவ. 11-கோவை, அவிநாசி ரோட்டில் இருந்து உடையாம்பாளையம் செல்லும் ரோட்டில், இருபுறமும் உயரழுத்த மின் கம்பங்கள் இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கோவை, நவஇந்தியா பகுதியில், அவிநாசி ரோட்டில் இருந்து மீனா எஸ்டேட் மற்றும் உடையாம்பாளையம் போன்ற குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் பிரதான ரோடு உள்ளது. இப்பகுதியில், கலை அறிவியல் கல்லுாரி, பள்ளிகள் மற்றும் தனியார் மருத்துவமனை இருப்பதால், தினமும், 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர்.ரோட்டின் இரு புறமும் உயரழுத்த மின்கம்பங்கள் எதிரெதிராக உள்ளன. இதனால், அகலம் குறைந்து, வாகனங்கள் செல்ல தடையாக உள்ளது. அவிநாசி ரோடும், இந்த ரோடும் சந்திக்கும் பகுதியில், எதிரெதிர் திசையில் உள்ள இந்த மின் கம்பங்களால், வாகனங்கள் ஒதுங்க முடியாமல், அவ்வப்போது விபத்தும் நடக்கிறது.இவற்றை இடம் மாற்றி, ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென்பது, இப்பகுதியில் உள்ள மக்களின் நீண்ட கால கோரிக்கை. மின் கம்பங்களை அருகில் உள்ள மின் வாரிய சுற்றுச்சுவர் அருகே இடம் மாற்றுமாறு, மின் வாரியத்திடம் மனு அளித்ததற்கு, 'மாநகராட்சி சார்பில், 'ஷிப்டிங் சார்ஜ்' செலுத்த வேண்டும்' என, பதில் தரப்பட்டுள்ளது.மாநகராட்சியிடம் மனு கொடுத்தபோது, 'நிதி பற்றாக்குறை இருப்பதால், இதற்கு நிதி ஒதுக்க இயலாது' என, பதிலளித்துள்ளனர். முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியதற்கு, 'மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என, சம்பிரதாயமான பதில் வந்துள்ளது. இந்த மின் கம்பங்களில், வாகனங்கள் மோதி, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், இடம் மாற்ற வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்துக்கு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X