9 நாட்களில் 16 குழந்தைகள் பலி விசாரணை நடத்த குழு அமைப்பு| Dinamalar

9 நாட்களில் 16 குழந்தைகள் பலி விசாரணை நடத்த குழு அமைப்பு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 9 நாட்களில் 16 குழந்தைகள் பலி   விசாரணை நடத்த குழு அமைப்பு

கவுகாத்தி:அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் அரசு மருத்துவமனையில், ஒன்பது நாட்களில், 16 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அசாமில்,உள்ள ஜோர்ஹாட் அரசு மருத்துவமனையில், பிரவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் பெற்றெடுத்த குழந்தைகள், திடீரென இறந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.ஒன்பது நாட்களில், 16 குழந்தைகள் இறந்ததை அடுத்து, இதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைத்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவை, சராசரி எடையை விட மிகவும் குறைவாக இருந்ததாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இது குறித்து, ஜோர்ஹார் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:பிரசவத்தின் போது, பச்சிளம் குழந்தை இறக்கும் சம்பவம், நாட்டின் பிற மாநிலங்களை காட்டிலும், அசாமில் அதிகம்.
இந்த விஷயத்தில், தேசிய சராசரியை விட, மாநிலத்தின் சராசரி அதிகமாக உள்ளது. குழந்தை இறப்பை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.மாநிலத்தில் உள்ள பிற மருத்துவமனைகளை காட்டிலும், ஜோர்ஹார் மருத்துவ மனையில், அதிக உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, குழந்தை இறப்பு எண்ணிக்கையும் அதிகரிப்பது வழக்கமே.
எனினும், ஒன்பது நாட்களில், 16 குழந்தைகள் இறந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முன், இப்படி ஒரு சம்பவம் நடந்ததில்லை.கவுகாத்தியிலிருந்து சிறப்பு டாக்டர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளனர். அவர்களுடன், இங்குள்ள டாக்டர்களும் சேர்ந்து, குழந்தை இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வர். வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:48:33 IST Report Abuse
Srinivasan Kannaiya தெற்கு உள்ள கள்ளிப்பால் கலாச்சாரம் அங்கேயும் உள்ளதா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:47:47 IST Report Abuse
Srinivasan Kannaiya வடக்கே ஏன் குழந்தைகள் கொத்து கொத்தாக மடிகிறது... மத்திய அரசு என்ன செய்கிறது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:46:55 IST Report Abuse
Srinivasan Kannaiya ஏதோ வடக்கே வாழும் அரசியல்வாதிகள் செய்யும் சதியோ என்று நினைக்க தோன்றுகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X