ஒரு விபத்தும்...மீட்பும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு விபத்தும்...மீட்பும்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஒரு விபத்தும்...மீட்பும்

விபத்து மற்றும் இயற்கை பேரிடர் சமயங்களில், பாதிக்கப்பட்டோரை விரைவாக மீட்டு சிகிச்சை அளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில், பாலசுந்தரம் ரோடு, மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அருகே நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.இதில், 25 மாணவர்களுடன் சென்ற கல்லுாரி பஸ், குறுக்கே வந்த இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க, மின் கம்பத்தில் மோதுகிறது. பஸ்சில் பயணித்த மாணவர்களும், இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் விபத்தில் சிக்கி, படுகாயத்துடன் உயிருக்கு போராடுவதுபோல் ஒத்திகை செய்யப்பட்டது.அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைப்பது; விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதுபோல், தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது. படுகாயம் அடைந்தவர்களை, 'கோல்டன் ஹவர்ஸ்'க்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.விபத்தில் சிக்கியவர்களில் படுகாயம், காயம், லேசான காயம் என வகைப்படுத்தி, யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி தத்ரூபமாக இருந்ததால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள், உண்மையிலேயே பெரிய விபத்து ஏற்பட்டு, பலர் உயிருக்கு போராடி வருவதாக நினைத்து, அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் வேகமாக பல்வேறு பகுதிகளுக்கு பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஒத்திகை நிகழ்ச்சியில், மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் சுஜித்குமார், ராமகிருஷ்ணா மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி ராம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X