சாலை விபத்தில், 'ஷாஜகான்' மரணம் மினி தாஜ்மகாலில் உடல் அடக்கம்| Dinamalar

சாலை விபத்தில், 'ஷாஜகான்' மரணம் மினி தாஜ்மகாலில் உடல் அடக்கம்

Added : நவ 11, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சாலை விபத்தில், 'ஷாஜகான்' மரணம் மினி தாஜ்மகாலில் உடல் அடக்கம்

காஜியாபாத்:தன் மனைவியின் நினைவாக, 'மினி' தாஜ்மஹால் கட்டிய, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பைசுல் ஹாசன் காத்ரி, 83, சாலை விபத்தில் உயிரிழந்தார். மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே, அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள புலந்தர்ஷகர் மாவட்டம் காசர் கலான் பகுதியைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற தபால் அதிகாரியான, பைசுல் ஹாசன் காத்ரி. கடந்த, 1953ல் தஜாமுல்லி பேகத்தை திருமணம் செய்தார் காத்ரி; இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில், புற்றுநோயால், பேகம், 2011ல் உயிரிழந்தார்.
அதையடுத்து, மனைவியின் நினைவாக, தன்னுடைய இடத்தில், 'மினி' தாஜ்மஹால் கட்டத் துவங்கினார் காத்ரி. ஆக்ராவில், தன் மனைவியின் நினைவாக, ஷாஜகான் கட்டிய தாஜ்மஹால் உலக புகழ்பெற்ற கட்டடமாக திகழ்கிறது. அவரை போன்றே, தன் மனைவியின் நினைவாக, 'மினி' தாஜ்மஹாலை எழுப்பினார், காத்ரிஆனால், பளிங்கு கற்கள் வாங்க பணமில்லாததால், அது முழுமை அடையவில்லை.
இதற்கிடையே, அதற்கு அருகில் இருந்த தன் நிலத்தை, பெண்கள் பள்ளி கட்டுவதற்காக, அரசுக்கு தானமாக அளித்தார் காத்ரி.இதையறிந்து, அப்போது முதல்வராக இருந்த, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பண உதவி செய்வதாக கூறினார். ஆனால், பள்ளி கட்டுவதற்கு உதவும்படி காத்ரி கோரினார். அதன்படி, அந்த கிராமத்தில், அரசு பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது.
பலர் பணம் கொடுத்த உதவ முன்வந்தபோதும், அதை, காத்ரி மறுத்துள்ளார். 'என்னுடைய மனைவிக்கு என்னுடைய வருமானத்தில்தான் சமாதி கட்டுவேன்' என, கூறி வந்தார்.இந்த நிலையில், சமீபத்தில், சாலையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி காத்ரி பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவருடைய விருப்பத்தின்படி, மினி தாஜ்மஹாலில், மனைவியின் கல்லறைக்கு அருகிலேயே, காத்ரியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மினி தாஜ்மஹாலில் பளிங்கு கற்கள் பொருத்தி, அதை முழுமையான கட்டடமாக மாற்றும் முயற்சியில் ஈடுபடப் போவதாக, அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naga - Muscat,ஓமன்
14-நவ-201819:44:49 IST Report Abuse
Naga நல்ல மனிதர் மனைவியின் நினைவாகவே வாழ்ந்துவிட்டார்,
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
11-நவ-201815:14:38 IST Report Abuse
MaRan நல்ல மனிதர் ,,மனைவி யின் அருமை அவள் இருக்கும்போது தெரிவதில்லை,,
Rate this:
Share this comment
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
14-நவ-201808:27:54 IST Report Abuse
வேலங்குடியான்உண்மை சகோ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X