தொட்டு விடும் துாரத்தில் வெற்றி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொட்டு விடும் துாரத்தில் வெற்றி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

வாழ்க்கை என்பது கண்ணுக்கு எட்டாத அளவுக்கு கடல் போல் பரந்து விரிந்திருக்கிறது. அதில் நீந்துவதும், தத்தளிப்பதும், மூழ்குவதும் எல்லோருக்கும் நிகழ்கிறது. தன்னம்பிக்கையும், தளராத மன உறுதியும் உள்ளவர்கள் நீந்தி கரையேறுகின்றனர்.சாதாரண மனிதர்கள் வாழ்கிறார்கள்; சாதனையாளர்கள் வாழ்ந்து காட்டுகிறார்கள்; சாதிக்க நினைப்பவர்கள் சவால்களையும், தடைகளையும் மிக சாதுர்யமாக திட்டமிட்டு கடந்து செல்வதால், வெற்றிப்படிக்கட்டு விரைவில் கிட்டுகிறது. தனது லட்சியத்தை நோக்கி பயணிக்க துணியாதவர்கள் வாழ்வில் தோல்வியை தழுவுகின்றனர்.கலை, கல்வி, விளையாட்டு என, பல துறைகளில் சாதனை படைத்தவர்களின் அனுபவங்களை கேட்கும்போது, நாமும் சாதிக்க வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கிறது. அதே உணர்வு, கோவை சட்டக்கல்லுாரியில் முதுகலை சட்டம் பயின்று, மாநிலத்தில் முதல் மாணவியாக தங்கப்பதக்கம் பெற்றுள்ள தேவசேனாவை சந்தித்தபோது ஏற்பட்டது.அவரது தனித்திறனும், நுண்ணறிவும், திட்டமிடலும் வியக்க வைக்கிறது. நுழைவு தேர்வில் மாநிலத்தில் முதலிடம், பல்கலை அளவில் பாடப்பிரிவில் முதலிடம், முதுகலையில் முதலிடம் என, அவரது கல்வி சாதனை தொடர்கிறது. அவரை சந்தித்தபோது, அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.''சட்டப்படிப்பின் முக்கியத்துவத்தை, எனது தந்தை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். அதனால், சட்டம் படிக்க ஆர்வம் அதிகமானது. இளங்கலையில் முதலிடம் வர திட்டமிட்டேன். ஒரு பாடத்தில்தான் முதலிடம் கிடைத்தது. இளங்கலையில் விட்டதை முதுகலையில் பிடிக்க வேண்டும் என்ற வேகம் மனதில் எழுந்தது. அதற்காகவே முதுகலையில் சேர்ந்தேன். நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி படித்தேன்; இரண்டு தங்கம் கிடைத்துள்ளன.''கவர்னர் கரங்களால் மெடல் வாங்கியபோது, இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இப்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி வருகிறேன். வெற்றி தொட்டு விடும் துாரத்தில் இருக்கிறது,'' என, கட்டை விரலை உயர்த்திக் காட்டினார். தேவசேனா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X