குடியரசு தின சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபருக்கு அழைப்பு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

குடியரசு தின சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்க அதிபருக்கு அழைப்பு

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க, தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமாபோசாவை அழைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் குடியரசு தினம், ஜன., 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்றைய தினம், டில்லியில், நாட்டின் வளர்ச்சி, கலாசாரத்தை பறைச்சாற்றும் வகையில், கண்கவர் பேரணி நடக்கும். இந்த விழாவில், வெளிநாட்டைச் சேர்ந்த அதிபர் அல்லது பிரதமர், சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
அடுத்த ஆண்டு, ஜனவரி, 26ல் நடக்கும் குடியரசு தின விழாவில், அமெரிக்க அதிபர் டிரம்ப், சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார் என, தகவல் வெளியானது. ஆனால், முக்கியமான பணிகள் இருப்பதால், டிரம்பால் பங்கேற்க முடியாது என, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவித்தது.மேலும், இந்தியா சார்பில், டிரம்புக்கு முறைப்படி எந்த அழைப்பும் அனுப்பப்பட வில்லை என, தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, யாருக்கு அழைப்பு விடுக்கலாம் என, மத்திய அரசு ஆலோசித்தது. கடந்த, 10 ஆண்டுகளில், ஆப்ரிக்காவை சேர்ந்த எந்த தலைவரும், சிறப்பு விருந்தினராக பங்கேற்கவில்லை. அதனால், இம்முறை, ஆப்ரிக்க நாடுகளை சேர்ந்த ஒருவரை, சிறப்பு விருந்தினராக அழைக்க, முடிவு செய்யப்பட்டது.இதன்படி தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ராமாபோசாவை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X