ரயில் பெட்டியில் சார்ஜ் ஏற்றும் வசதி: ரயில்வே வாரியம் அதிரடி திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயில் பெட்டியில் சார்ஜ் ஏற்றும் வசதி: ரயில்வே வாரியம் அதிரடி திட்டம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ரயில் பெட்டியில் சார்ஜ் ஏற்றும் வசதி: ரயில்வே வாரியம் அதிரடி திட்டம்

புதுடில்லி:நாடு முழுவதும், ரயில்களின் பெட்டிகளில், 'சார்ஜ்' போடுவதற்கான, 'பிளக்பாயின்ட்' உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
ரயில் பயணியரின் நலனை கருதி, பல அதிரடி நடவடிக்கைகளை, ரயில்வே வாரியம் எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, 600 கோடி ரூபாய் செலவில், 2,000 பழைய ரயில் பெட்டிகளில், பயணியர், தங்கள் மொபைல் போன்களில், 'சார்ஜ்' ஏற்றுவதற்கான, 'பிளக்பாயின்ட்'கள், புது இருக்கைகள், கழிப்பறைகளில் நவீன வசதிகள் உள்ளிட்ட பல வசதிகளை செய்ய, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில் பயணியரின் நலனை மனதில் வைத்து, முதற்கட்டமாக, 600 கோடி ரூபாய் செலவில், 2,000 பழைய ரயில் பெட்டி களில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஆண்டுதோறும் பராமரிப்பு பணிக்கு இந்த பெட்டிகள் வரும் போது, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இதன் மூலம், ரயில் பெட்டிகளில், பயணியர் மொபைல் போனுக்கு, 'சார்ஜ்' போடுவதற்கான, 'பிளக்பாயின்ட்'கள் அமைக்கப்படும்.
ரயில் பெட்டிகளில், வண்ணமயமான, 'வால்பேப்பர்'கள் ஒட்டப்படும்.ரயில் பெட்டிகளில் உள்ள கழிப்பறைகளில், கண்ணாடி, குழாய்கள் உள்ளிட்டவை நவீன முறையில் வைக்கப்படும். இதன் மூலம்,ரயில் பயணியருக்கு,ரயில் பயணத்தின் போது நல்ல சவுகரியமான அனுபவம் கிடைக்கும். இந்த புனரமைப்பு பணிகள், விரைவில், நாடு முழுவதும் உள்ள, 40 ஆயிரம் ரயில் பெட்டிகளில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X