கள்ளக்காதலனின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் கைது| Dinamalar

கள்ளக்காதலனின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த பெண் கைது

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புவனேஷ்வர்:ஒடிசாவில், கள்ள உறவு வைத்திருந்த நபருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால், அந்த நபரின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த, திருமணமான பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தின், கியோன்ஜ்ஹர் மாவட்டம், ஜரபேடா கிராமத்தை சேர்ந்தவர், ராஜேந்திர நாயக், 25. தமிழகத்தின், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், தீபாவளி விடுமுறைக்காக, ஒடிசா சென்றார்.பதவுவாகான் கிராமத்தில் வசிக்கும் கமலா பத்ரா, 24, ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரிந்தும், அவருடன் நெருங்கி பழகி வந்தார்.
இருவரிடையே, பல நாட்களாக கள்ள உறவு இருந்ததாக கூறப்படுகிறது.ஒடிசா சென்ற நாயக், வழக்கம் போல், கமலா வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட தால், அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சற்று நேரத்தில் சமாதானம் ஏற்பட்டதை அடுத்து, நாயக், கமலாவின் வீட்டிலேயே தங்கினார். எனினும், நாயக் மீதான கோபத்தை மனதுக்குள் அடக்கி வைத்திருந்த கமலா, அவர் உறங்கிக் கொண்டிருந்த போது, கூர்மையான ஆயுதத்தால், அவரின் பிறப்புறுப்பை அறுத்து எறிந்தார்.
கடும் வலியுடன் வீட்டிற்கு சென்ற நாயக்கை, அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், நாயக், கட்டாக் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கமலாவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X