அயோத்தியில் புத்தர் சிலை பா.ஜ., - எம்.பி., சர்ச்சை பேச்சு| Dinamalar

அயோத்தியில் புத்தர் சிலை பா.ஜ., - எம்.பி., சர்ச்சை பேச்சு

Added : நவ 11, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோண்டா:'அயோத்தி, புத்தருடன் தொடர்புள்ள பகுதி; அதனால், அங்கு புத்தர் சிலையை அமைக்க வேண்டும்' என, பா.ஜ., பெண், எம்.பி., கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பாரிச் தொகுதி பெண், எம்.பி., சாவித்ரிபாய் புலே, கூறியதாவது: அயோத்தியில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அங்கு, புத்தருடன் தொடர்புடைய பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.இந்தியா, புத்தர் நாடு; அயோத்தியும், புத்தருடன் தொடர்புடைய பகுதி என்பதை மீண்டும் வலியுறுத்தி கூறுகிறேன்.
அதனால், அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில், புத்தருக்கு மிக பிரமாண்ட சிலையை அமைக்க வேண்டும்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, தனிநபர் மசோதா கொண்டு வரப்போவதாக, பா.ஜ., ராஜ்யசபா, எம்.பி., ராகேஷ் சின்ஹா கூறியுள்ளார். அனைத்து மதங்களுக்கும் சம உரிமையை நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. நமது நாடு, மதச்சார்பற்ற நாடு. அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.'அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த பலர் மற்றும் ஹிந்துத்துவ அமைப்புகள் கூறி வரும் நிலையில், சாவித்ரிபாய் புலேவின் பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Basha - Doha,கத்தார்
11-நவ-201813:34:20 IST Report Abuse
Mohamed Basha சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் மத சார்பற்ற நாட்டில் மதத்தையே காரணமாக வைத்து இந்த பி ஜே பி செய்கிற அரசியல் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டும் என்றே தெரியவில்லை மக்களிடத்தில் ஒட்டு வாங்கி மக்களையே வேதனைக்குள்ளாக்கும் இதை போன்றவர்கள் வேலியே பயிரை மேய்வது போலத்தான்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-நவ-201808:36:04 IST Report Abuse
Srinivasan Kannaiya கயாவில் ராமர் கோவில் அமைக்கலாமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X