தினக்கூலியாக ரூ.500 தொழிலாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினக்கூலியாக ரூ.500 தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தேயிலை தொழிலாளர்கள் வலியுறுத்தல்

வால்பாறை:வால்பாறையில் தேயிலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், என, தொழிலாளர்கள் வலியுறுத்துகின்றனர்.வால்பாறையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எஸ்டேட்களில் காபி, தேயிலை, ஏலம், மிளகு பயிரிடப்பட்டன. எஸ்டேட்களில் தற்போது, 30 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.தேயிலை சீசன் காலங்களில் ஒரு தொழிலாளி, 50 முதல், 100 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர். ஆனால், தேயிலை தொழிலாளர்களுக்கு மிக குறைந்த சம்பளமே வழங்கப்படுகிறது.தற்போது, தினக்கூலியாக, 307 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எஸ்டேட்டை விட்டு வெளியேறி, வேறு வேலைவாய்ப்பு தேடி இடம் பெயர்கின்றனர். இதனால், வால்பாறை மக்கள் தொகை சரிந்து வருகிறது.தொழிலாளர்கள் கூறுகையில், 'எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்சக் கூலியாக, 350 ரூபாய் வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி, தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 500 ரூபாய் பெற்றுத்தர ஆளும்கட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.'குறைவான சம்பளம் வழங்குவதால், குடும்ப செலவுக்கு சிரமமாக உள்ளது. தொழிலாளர்கள் தொடர்ந்து பணிபுரிய வேண்டுமானால், தினக்கூலியாக, 500 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X