'சிக்னலை' கவனித்து ரோட்டை கடக்கணும்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சிக்னலை' கவனித்து ரோட்டை கடக்கணும்!

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 'சிக்னலை' கவனித்து ரோட்டை கடக்கணும்!

போக்குவரத்து போலீசார் அறிவுரை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் மற்றும் காந்தி சிலை 'சிக்னல்' பகுதியில், விதிமுறையை பின்பற்றி சென்றால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுவதை தவிர்க்க முடியும், என, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், காந்திசிலை பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 'சிக்னல்' இயக்கப்படுகிறது. இரு பஸ் ஸ்டாண்ட்களை இணைக்கும் வகையில், சுரங்கபாதை அமைக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலானோர், ரோட்டை கடந்து பஸ் ஸ்டாண்ட் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 'சிக்னல்' பகுதியில், ரோட்டை கடக்கும் போது, வாகனங்கள் வருவதை பயணிகள் கவனிக்காமல் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகிறது.வாகனங்களுக்கு நேரம் ஒதுக்கப்படுவது போன்று, பயணிகள் ரோட்டை கடந்து செல்வதற்கு, 'சிக்னலில்' நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 'சிக்னலில்' குறிப்பிட்ட நிமிடத்துக்கு, பாதசாரிகளுக்கு பச்சை நிற விளக்கு எரியும் போது, ரோட்டை கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பாதசாரிகளுக்காக 'சிக்னல்' இயங்குவதை கவனிக்காமல், சிகப்பு நிற சிக்னல் எரியும் போதே ரோட்டை கடக்க முற்படுகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படுகிறது.போலீசார் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பயணிகள் ரோட்டை கடந்து செல்ல நேரம் ஒதுக்கப்பட்டு, 'சிக்னல்' இயக்கப்படுகிறது. பாதசாரிகளுக்கான நேரத்தில் மட்டுமே, பயணிகள் ரோட்டை கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X