சகோதரியை காப்பாற்ற முயன்றவர் பலி| Dinamalar

சகோதரியை காப்பாற்ற முயன்றவர் பலி

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காசியாபாத்:உ.பி.,யில், சகோதரனின் நலனுக்காக சகோதரி யர் விரதம் இருக்கும், 'பாய் துஜ்' பண்டிகை கொண்டாடப்பட்டது.காசியாபாத் மாவட்டம் கூக்னா பகுதியை சேர்ந்த ஷீஸ்பால் என்பவரின் மகள் சவிதா, இரு குழந்தைகள் மற்றும் சகோதரன் மனோஜ், 23, உடன், கிரேட்டர் நொய்டா பகுதியில் வசிக்கும் மூத்த சகோதரனை சந்தித்து, பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களை வழிமறித்த கொள்ளையர்கள், சவிதா அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றனர். அவர்களை தடுத்த மனோஜ் மற்றும் சவிதாவை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.மருத்துவமனையில், மனோஜை சோதித்த டாக்டர்கள்,அவர் இறந்துவிட்டதாக கூறினர். 'பாய் துஜ்' பண்டிகை நாளில், சகோதரியை காப்பாற்ற முயன்று, சகோதரன் இறந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X