தன்னுாற்று நீரில் மூழ்கிய விளைநிலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தன்னுாற்று நீரில் மூழ்கிய விளைநிலம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 தன்னுாற்று நீரில் மூழ்கிய விளைநிலம்

நெகமம்:நெகமம் அடுத்துள்ள தொப்பம்பட்டியில், தன்னுாற்று நீரால் சாகுபடி நிலம் மூழ்கியதால், பயிர் செய்ய வழியின்றி விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.நெகமம் அடுத்த தொப்பம்பட்டியில் கரப்பாடி பிரிவில், விவசாயி பாபு என்பவரது பாசன நிலம் உள்ளது. அவரது ஒரு ஏக்கர் நிலத்தில், கத்தரி, தக்காளி மற்றும் வெள்ளரி சாகுபடி மேற்கொண்டிருந்தார். கடும் வறட்சியின் போது, தாழ்வான நிலத்தில், தீவன சோளம் விதைப்பு மேற்கொண்டார். தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையால் நிலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால், உழவுப்பணி மற்றும் சாகுபடி மேற்கொள்ளாமல் இருந்தார்.இந்நிலையில், வெள்ளாளபாளையம், ஆலாம்பாளையம் பகுதியில், தோப்புகளில் தன்னுாற்று ஏற்பட்டு, அதிகப்படியான நீர் கால்வாய் வழியாக வெளியேறியது. கிராமங்களின் ஒட்டுமொத்த தண்ணீரும், பாபுவின் நிலத்தில் தேங்கியுள்ளது. சமீபத்தில் நடவு செய்யப்பட்ட, தென்னங்கன்றுகள் நீரில் மூழ்கின. அவரது தோட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள விவசாய நிலத்திலும் உழவு பணி மேற்கொள்ள முடியாத அளவுக்கு ஈரப்பதம் அதிகரித்துள்ளது.விவசாயி பாபு கூறுகையில், ''வெள்ளரி சாகுபடிக்காக, நிலத்தை தயார் படுத்திய நிலையில், தண்ணீர் தேங்கியுள்ளது. சாகுபடி செய்ய முடியாமல், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X