பகலில், 'நைட்டி' அணிய ஆந்திர பெண்களுக்கு தடை| Dinamalar

பகலில், 'நைட்டி' அணிய ஆந்திர பெண்களுக்கு தடை

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பகலில், 'நைட்டி' அணிய  ஆந்திர பெண்களுக்கு தடை

ராஜமுந்திரி:ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்ட கிராமத்தில், பெண்கள்பகலில், 'நைட்டி' அணிய, ஊர் பெரியவர்கள் தடை விதித்துள்ளனர். 'மீறுவோருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவில், மேற்கு கோதாவரி மாவட்டம், டோக்லா பள்ளி கிராமத்தில், ஒன்பது பெரியவர்களை ஊர் பெரியவர்களாக தேர்ந்தெடுத்து, அவர்களுடைய உத்தரவுகளை கிராமத்தினர் கடைப்பிடித்து வருகின்றனர்.


அபராதம்



சில மாதங்களுக்கு முன், 1,800 பெண்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், பெண்கள் பகலில், 'நைட்டி' அணிய, ஊர் பெரியவர்கள் தடை விதித்தனர். இரவு நேர உடையான, நைட்டியை காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை, பெண்கள் அணியக் கூடாது என்றும், மீறினால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிட்டனர்.தடையை மீறி, பகலில் நைட்டி அணிந்திருக்கும் பெண்கள் குறித்து, தகவல் தெரிவிப்போருக்கு, 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டது.
இது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் பென்டாசியா மஹாலக் ஷமி கூறியதாவது:பகலில் பெண்கள் நைட்டி அணிந்து, திறந்தவெளியில் துணி துவைப்பது, கடைகளுக்கு செல்வது, கூட்டங்களில் பங்கேற்பது நன்றாக இல்லை.எனவே, பகல் நேரத்தில், பெண்கள் நைட்டி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


விசாரணை



இது குறித்து தகவல் அறிந்து, கிராமத்திற்குவந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், கிராம பெண்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால், ஊர் பெரியவர்களின் உத்தரவுக்கு எதிராக பெண்கள் புகார் அளிக்காததால், அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒன்பது மாதங்களுக்கு முன், பிறப்பிக்கப்பட்ட இந்த தடை உத்தரவு, அதிகாரிகளின் வருகைக்கு பின் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X