டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரம்

Added : நவ 11, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ரூ.36 ஆயிரம் அபராதம் வசூல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் கழிவுப்பொருட்கள் வைத்திருப்பவர்களுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை, 36 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரில், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடு, வீடாக சென்று, கொசுப்புழு உற்பத்தியாவதை கட்டுப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு கொசுப்புழு உற்பத்தி செய்யும் பொருட்களை அப்புறப்படுத்தாவிட்டால் அபராதம் விதிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சுகாதார பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, 300 வீடுகளுக்கு, மூன்று பேர் கொண்ட ஒரு குழு என்ற அடிப்படையில், 28 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த, சேமித்து வைத்திருக்கும் தண்ணீரில், 'அபேட்' மருந்து கரைசல் ஊற்றுதல், கொசு மருந்து அடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், தண்ணீர் தேங்காதவாறு அறிவுறுத்தப்படுகிறது.குடியிருப்பு பகுதி, ரோட்டோரத்தில் தேங்கியிருந்த வாகனத்தின் பழைய டயர்கள், இளநீர் தொட்டி, தேங்காய் சிரட்டைகளை அகற்றினர்.ஆய்வு பணிக்கு வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கும் நபர்கள் மற்றும் தேவையற்ற கழிவுப்பொருட்களை தேக்கி கொசுப்புழு உருவாகும் வகையில் வைத்திருந்தால், இரண்டு முறை எச்சரிக்கை செய்யப்படும். அதன்பிறகும், சுகாதார பணிகள் மேற்கொள்ளாவிட்டால், அபராதம் விதிக்கப்படுகிறது.குடியிருப்புகள், புதிய குடியிருப்பு கட்டுமானங்கள், வணிக நிறுவனங்களில், கொசுப்புழு உருவாகும் வகையில், பொருட்களை வைத்திருந்ததால், குறைந்த பட்சம் ஆயிரம் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை, 20 பேரிடம் இருந்து, 36 ஆயிரம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.மேலும், ரோடுகளில் குப்பை கொட்டக்கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி, ரோட்டில் குப்பை கொட்டியதாக, 15 பேரிடம், 9,750 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X